உங்களுடன் ஸ்டாலின் முகாமில். எம். எல். ஏ. விடம் பொதுமக்கள் கோரிக்கை!!


ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் அடுத்த குன்னத்தூர் அரசு பள்ளியில் குன்னத்தூர், தப்பூர், வைலம்பாடி ஊராட்சிக்கு உட்பட்ட பொதுமக்கள் பயன்பெறும் வகையில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற்று.

 இந்த முகாமிற்கு. வட்டாட்சியர். செல்வி. வட்டார வளர்ச்சி அலுவலர். சரவணன் தலைமை தாங்கினார்.திமுக வடக்கு ஒன்றியசெயலாளர்.செல்வம்,குன்னத்தூர்ஊராட்சிமன்றதலைவர்கள்.வேண்டாபொன்னுரங்கம் தப்பூர் தலைவர். பழனி, விளாம்பாடி மோகன்,  ஆகியோர் முன்னிலை வகித்தனர்.வட்டார ஒருங்கிணைப்பாளர். சாந்தகுமார் அனைவரையும் வரவேற்றார்.

இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக சோளிங்கர் சட்டமன்ற உறுப்பினர். ஏ. எம். முனிரத்தினம் MLA அவர்கள் கலந்து கொண்டு முகாமை பார்வையிட்டு கர்ப்பிணிப் பெண்களுக்கு ஊட்டசத்து பெட்டகம், மக்களை தேடி மருத்துவம்  சார்பில் மருந்து மாத்திரைகள் வேளாண்மை துறையின் மூலம் விதைகள் வழங்கினார்.

 இந்த நிகழ்வில் குன்னத்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட துணை சுகாதார நிலையம்,கால்நடைமருந்தகம்,அருந்ததியர் குடியிருப்பு பகுதிக்கு செல்லும் வழியில் கால்வாயில் சிறு பாலம், பல்ராம் நகருக்கு சாலை வசதி, குன்னத்தூர் அல்லி தாங்கல் பகுதிக்கு மயான பாதை,நெல்சேமிப்புகிடங்கு,உயர்நிலைப் பள்ளியை மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தி தரவேண்டும்.குன்னத்தூர் காலனி பகுதியில் உள்ள ஐந்து தெருக்களுக்கு சிமெண்ட் சாலை அமைத்துதரவேண்டும்எனபொதுமக்கள்கோரிக்கைவைத்தனர்.இதில் தனி வட்டாட்சியர். அருள் செல்வம், துணை வட்டாட்சியர்கள் கிராம நிர்வாக அலுவலர்கள் ஆகியோர் உடன் இருந்தனர்.

ராணிப்பேட்டை செய்தியாளர் சிவகுமார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!