அரசியலமைப்பு சட்டம் பாதுகாப்புபயணம் ஒத்துழைப்பிற்கு நன்றி! மாநில ராகாபச தலைவர் வாழ்த்து!!
அரசியலமைப்பு சட்டம் பாதுகாப்புதமிழக சுற்று பயணத்திற்கு ஒத்துழைப்பு வழங்கிய அனைத்து காங்கிரசாருக்கு நன்றி மற்றும்வாழ்த்தை மாநில ராஜீவ் காந்தி பஞ்சாயத்து ராஜ் சங்கத்தின் தலைவர் டாக்டர். எஸ்.சசிக்குமார் அறிக்கையில தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்து இருப்பதாவது தமிழகத்தில் காங்கிரஸ் பேரியக்கத்தின் கட்டமைப்பை பலப்படுத்தவும், இரண்டாம் கட்ட மற்றும் மூன்றாம் கட்டதலைவர்களை உருவாக்கவும், மக்கள் மத்தியில் காங்கிரஸ் பேரியக்கம் பேரெழுச்சி பெற்றிட அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாப்போம் என்பதை வலியுறுத்தி கன்னியாகுமரி முதல் தியாகத் தலைவர். ராஜீவ் காந்தியின் விதையாய் விழுந்த காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர். ராஜீவ் காந்தி நினைவகம் வரை நடைபயணம் மேற்கொள்ள திட்டமிட்டு முதற்கட்டமாக கடந்த 29.08.2025 தேதி கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடங்கி தொடர்ச்சியாக 17 நாட்கள் பயணம் மேற்கொண்டு “கன்னியாகுமரி கிழக்கு மாவட்டம், நாகர்கோயில் மாநகராட்சி மாவட்டம், கன்னியாகுமரி மேற்கு மாவட்டம், தென்காசி மாவட்டம், திருநெல்வேலி மாநகராட்சி மாவட்டம், தூத்துக்குடி தெற்கு மாவட்டம், தூத்துக்குடி மாநகராட்சி மாவட்டம், விருதுநகர் மேற்கு மாவட்டம், மதுரை தெற்கு மாவட்டம், மதுரை மாநகராட்சி மாவட்டம், சிவகங்கை மாவட்டம், திண்டுக்கல் மாநகராட்சி மாவட்டம், திண்டுக்கல் மேற்கு மாவட்டம், புதுக்கோட்டை தெற்கு மாவட்டம், புதுக்கோட்டை வடக்கு மாவட்டம், தஞ்சாவூர் தெற்கு மாவட்டம், தஞ்சாவூர் மாநகராட்சி மாவட்டம், தஞ்சாவூர் வடக்கு மாவட்டம், திருச்சி தெற்கு மாவட்டம், திருச்சி மாநகராட்சி மாவட்டம், திருச்சி வடக்கு மாவட்டம், பெரம்பலூர் மாவட்டம், கடலூர் தெற்கு மாவட்டம், கடலூர் மத்திய மாவட்டம், கடலூர் மேற்கு மாவட்டம், விழுப்புரம் மத்திய மாவட்டம், திருவண்ணாமலை தெற்கு மாவட்டம், திருவண்ணாமலை வடக்கு மாவட்டம், வேலூர் மத்திய மாவட்டம், வேலூர் மாநகராட்சி மாவட்டம், இராணிப்பேட்டை மாவட்டம், திருவள்ளூர் தெற்கு மாவட்டம், ஆவடி மாநகராட்சி மாவட்டம், வடசென்னை கிழக்கு மாவட்டம், வடசென்னை மேற்கு மாவட்டம், மத்திய சென்னை கிழக்கு மாவட்டம், தென் சென்னை கிழக்கு மாவட்டம், தென் சென்னை மத்திய மாவட்டம் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டம்” ஆகிய 40 அரசியல் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள், முன்னால் மாநில தலைவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகளை சந்தித்து நடைபயணத்திற்கான ஆலோசனைகள் பெற்று நேற்று 13.09.2025 கடைசியாக காஞ்சிபுரம் மாவட்டம் , சுங்குவார்சத்திரத்தில் ஆலோசனைக் கூட்டம் சிறப்பாக நடைபெற்று முடிவடைந்தது. இந்த ஆலோசனை சந்திப்பிற்கு ஏற்பாடுகள் செய்த ஆர். ஜி. பி. ஆர். எஸ். மாநில துணைத் தலைவர்கள், பொதுச் செயலாளர்கள், மாநில நிர்வாகிகள், மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள், மண்டல ஒருங்கிணைப்பாளர்கள், அனைத்து நிலை நிர்வாகிகள் மற்றும் என்னோடு தொடர்ச்சியாக 17 நாட்கள் பயணம் செய்த கடலூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர். A.குமரவேல், மாநிலத் துணைத் தலைவர். வால்பாறை .அமீர், தென் சென்னை கிழக்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர். வேலு, ஸ்ரீபெரும்புதூர் நகராட்சி ஒருங்கிணைப்பாளர். டில்லிகுமார், செய்யாறு நகராட்சி ஒருங்கிணைப்பாளர் . டில்லிபாபு, அரக்கோணம் சட்டமன்ற ஒருங்கிணைப்பாளர். சரவணன் ஆகியோருக்கு மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு ராஜீவ் காந்தி பஞ்சாயத்து ராஜ் சங்கதன், மாநில தலைவர் டாக்டர். சசிகுமார்அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
அரக்கோணம் செய்தியாளர் ரவி.

கருத்துகள்
கருத்துரையிடுக