மணவெளி: புது குப்பம் கிராமத்தில் புதிய சிமெண்ட் சாலை அமைக்கும் பணிக்கு நடைபெற்ற பூமி பூஜை!!

புதுச்சேரி மாநிலம்,மணவெளி சட்டமன்றத் தொகுதி புதுக்குப்பம் கிராமத்தில் உள்ள வீரன் கோயில் வீதிக்கு ரூபாய். 08 லட்சம் மதிப்பில்  புதிய சிமெண்ட் சாலை அமைக்கும் பணிகளை மாண்புமிகு சட்டப்பேரவை தலைவர். செல்வம் ஆர் அவர்கள் நேற்று 03.09.2025 காலை பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்.

மாண்புமிகு சட்டப்பேரவைத் தலைவர். செல்வம் ஆர்.அவர்கள் சீரிய முயற்சி எடுத்து தனது சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து மணவெளி தொகுதியில் உள்ள புதுக்குப்பம் கிராமத்தில் உள்ள வீரன் கோயில் வீதிக்கு  புதிய சிமெண்ட் சாலை அமைக்கும் பணிக்காக ரூபாய் 08. லட்சம் மதிப்பில்  அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்து மூலம் பணிகளை தொடங்க அரசாணை பெற்று தந்தார்.

அதன்படி இப்பணிகளை தொடங்கும் முகமாக நேற்று 03.09.2025 காலை அந்த பகுதியில் நடைபெற்ற பூமி பூஜையில் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் மாண்புமிகு சட்டப்பேரவை தலைவருமான செல்வம். ஆர். அவர்கள் கலந்து கொண்டு இப்பணிகளை தொடங்கி வைத்தார். 

இந்த நிகழ்ச்சியில் அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர். ரமேஷ்  இளநிலை பொறியாளர். சரஸ்வதி  மற்றும்  புதுக்குப்பம் கிராம பஞ்சாயத்தார் தொகுதி முக்கிய பிரமுகர்கள் மற்றும் பெண்கள் உள்ளிட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

புதுச்சேரி மாநில செய்தியாளர் குமரவேல்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!