சோளிங்கர் தொகுதிக்கு ஐசக் போட்டி!பொதுக்குழு கூட்டத்தில் வேட்பாளர்கள் அறிவிப்பு!!

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் தலைமை, இடமாகக் கொண்டு அகில இந்திய ஜனநாயக மக்கள் கட்சி செயல்பட்டு வருகிறது .இந்த கட்சியின் சார்பில் தமிழ்மாநில சட்டமன்ற தொகுதி வேட்பாளர்கள் அறிவிப்பு  மற்றும் மாநில பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு கட்சியின் நிறுவன தலைவர் , டாக்டர். ஐசக் அய்யா தலைமை தாங்கி நடத்தினார் தென் மாநிலங்களின் செயலாளர் பேராயர். டேவிட் ,,, மாநில முதன்மை செயலாளர். செட்ரிக் பெநோ, மாநில செயலாளர் கிறிஸ்து ராஜா, மாநில பொருளாளர். பர்ண பாஸ் சைமன் ஆகியோர் முன்னிலை வைத்தனர். கூட்டத்தில் ஐசக் பேசிய பின்  வாசிக்கபட்ட தீர்மானங்கள் வருமாறு:

தாழ்த்தப்பட்ட மக்களுக்கு மத்திய அரசு ஒதுக்கிய நிதி எவ்வளவு செலவித்த தொகை எவ்வளவு திரும்ப அனுப்பிய தொகை எவ்வளவு என்று மத்திய மாநில அரசு வெள்ளை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.

சிறுபான்மை கிறிஸ்தவர்களுக்கு மத்திய அரசு ஒதுக்கிய நிதி எவ்வளவு செலவித்த தொகை எவ்வளவு திரும்ப அனுப்பிய தொகை எவ்வளவு என்று மத்திய மாநில அரசு வெள்ளை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.

தாழ்த்தப்பட்ட மக்களுக்கு அரசு இட ஒதுக்கீடு மூலமாக எத்தனை பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கியுள்ளது என்று வெள்ளை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.பிற்படுத்தப்பட்ட கிறிஸ்தவர் மக்களுக்கு அரசு இட ஒதுக்கீடு மூலமாக எத்தனை பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கியுள்ளது என்று வெள்ளை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இந்தியாவில் தற்போது 20 சதவிகிதத்தில் இருந்து 40 சதவிகிதமாக கிறிஸ்துவ மக்கள் பெருக்கியுள்ளனர். இவர்கள் கல்வி வேலை வாய்ப்பில் பின் தங்கி உள்ளதால் பிராமணர்களுக்கு 10.5  சதவீதம் ஒதுக்கப்பட்டது போல கிறிஸ்தவர்களுக்கும் 10.5 சதவீதம் இட ஒதுக்கீட்டை மத்திய மாநில அரசுகள் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல தீர்மானம் நிறைவேற்றப்பட்டது பின்னர் சோளிங்கர் தொகுதியில் ஐசக் போட்டியிடுவது உட்பட 30 க்கு மேற்பட்ட தொகுதிகளின் வேட்பாளர்கள் பெயர் அறிவிக்கப்பட்டது.

அரக்கோணம் செய்தியாளர் ரவி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!