கடலூர் மேற்கு மாவட்ட செயற்குழுக் கூட்டம் மாவட்ட கழக அவைத் தலைவர் டாக்டர். கொ. நந்தகோபாலகிருஷ்ணன் தலைமையில் நெய்வேலி தொ மு ச அலுவலகத்தில் நடைபெற்றது!!

கடலூர் மாவட்டம்,தீர்மானம் -1.வருகின்ற செப்டம்பர் 17, 2005 அன்று கரூரில் நடைபெற உள்ள முப்பெரும் விழாவில் விருதுகளைப் பெற தலைமை கழகத்தால் தேர்வு செய்யப்பட்டுள்ள தந்தை பெரியார் விருது பெறும் கழக துணைப் பொதுச்செயலாளரும், கழக நாடாளுமன்ற குழு தலைவருமான கனிமொழி கருணாநிதி அவர்களுக்கும், அண்ணா விருது பெறும் தணிக்கைக் குழு முன்னாள் உறுப்பினரும், பாளையங்கோட்டை நகர மன்ற முன்னாள் தலைவருமான 

 

சுப. சீத்தாராமன் அவர்களுக்கும், கலைஞர் விருது பெறும் நூற்றாண்டு கண்டவரும், அண்ணா நகர் பகுதி முன்னாள் செயலாளரும், அண்ணாநகர் சட்டப் பேரவை தொகுதி முன்னாள் உறுப்பினருமான  சோ.மா. இராமச்சந்திரன் அவர்களுக்கும், பாவேந்தர் விருது பெறும் கழக மூத்த முன்னோடியும், தலைமை செயற்குழு உறுப்பினரும், குளித்தலை முன்னாள் ஒன்றிய குழு தலைவருமான குளித்தலை சிவராமன் அவர்களுக்கும், பேராசிரியர் விருது பெறும் கழக ஆதிதிராவிடர் நலக்குழு தலைவரும், காட்டுமன்னார்கோயில் சட்டமன்றத் தொகுதி முன்னாள் உறுப்பினரும், சட்டப்பேரவை முன்னாள் கொறடாவுமான மருதூர் ஏ. இராமலிங்கம் அவர்களுக்கும், தளபதி மு.க.ஸ்டாலின் விருது பெறும் ஒருங்கிணைந்த கோவை மாவட்ட முன்னாள் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பொங்கலூர் நா. பழனிச்சாமி அவர்களுக்கும், இச்செயற்குழு வாழ்த்துக்களையும், பாராட்டுதல்களையும் தெரிவித்துக் கொள்வதோடு, கடலூர் மேற்கு மாவட்டத்திலிருந்து கழகத் தோழர்கள் பெருமளவில் ஒன்றிய, நகர, பேரூர் சார்பில் கலந்துக் கொண்டு முப்பெரும் விழாவை சிறப்பிப்பதென தீர்மானிக்கப்பட்டது.

தீர்மானம்-2.தமிழ்நாட்டில் உள்ள படித்த வேலையில்லா இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்துகின்ற வகையில், புதிய தொழிற்சாலைகளை நிறுவ கடந்த வாரம் ஜெர்மனி மற்றும் லண்டன் போன்ற நகரங்களுக்கு நேரில் சென்று ரூபாய் 15,000 கோடிக்கு மேல் அந்நிய முதலீட்டுகளை நம் தமிழ்நாட்டிற்கு கொண்டு வந்த கழகத் தலைவர் தமிழ்நாடு முதல்வர் தளபதி அவர்களுக்கு இச் செயற்குழு பாராட்டுதல்களையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்வதோடு, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பிரிவினரும் பயன்படும் வகையில் சுமார் 45 துறைகளின் மூலம் பயனாளிகளின் இல்லங்களுக்குச் சென்று அவர்களின் அவசிய தேவைகளை அறிந்து 45 நாட்களுக்கு 10000 முகாம்களை "உங்களுடன் ஸ்டாலின்" என்ற பெயரில் நடத்தி வரும் கழகத் தலைவர் மாண்புமிகு தமிழக முதல்வர், திராவிட மாடல் நாயகன் தளபதி மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு இச் செயற்குழு தனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறது.

தீர்மானம்-3."ஓரணியில் தமிழ்நாடு" என்னும் சிறப்பு செயல்பாட்டின் மூலம் 2,48,00,000 பேரை கழக உறுப்பினர்களாக சேர்த்து சாதனைப் படைத்த கழகத் தலைவர் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கும், மாநில இளைஞர் அணிச் செயலாளர் மாண்புமிகு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கும் இச்செயற்குழு தனது பாராட்டையும், இதற்காக உழைத்திட்ட அனைவருக்கும் இக்கூட்டம் நன்றியை தெரிவித்துக் கொள்கிறது.

தீர்மானம்-4.எதிர்வரும் 2026 சட்டமன்ற பொதுத் தேர்தலில் வரலாறு காணாத வகையில் கழகமும் மற்றும் அதன் கூட்டணி கட்சிகளும் வெற்றி காணும் வகையில் நமது மாவட்டத்திற்குட்பட்ட திட்டக்குடி, விருத்தாசலம், நெய்வேலி, பண்ருட்டி ஆகிய 4 சட்டமன்றத் தொகுதிகளிலும் உள்ள அனைத்து வாக்குச்சாவடிகளுக்கும் வாக்குச் சாவடி முகவர்கள் (BLA-2) BDA, & BLC பெயர் பட்டியலை சரிபார்த்து விடுபட்ட பாகங்களில் புதிதாக (BLA-2) BDA, & BLC-களை நியமனம் செய்து அதன் விவரங்களை மாவட்ட கழகத்திற்கு விரைவாக தெரிவிக்க ஒன்றிய, நகர, பேரூர் கழகச் செயலாளர்களை இச்செயற்குழு கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம்-5.வருகின்ற நவம்பர் 27ல் பிறந்த நாள் காணும் இளைஞர்களின் நம்பிக்கை நட்சத்திரம் தமிழகத்தின் எதிர்காலம் மாநில இளைஞர் அணி செயலாளர், தமிழ்நாடு துணை முதல்வர் மாண்புமிகு உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடும் வகையில் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிளைக் கழகங்களிலும் நலத்திட்ட உதவிகளை வழங்கி கொண்டாடும் வகையில் சிறப்பாக ஏற்பாடுகள் செய்திட வேண்டுமென ஒன்றிய, நகர, பேரூர் கழகச் செயலாளர்களை இச் செயற்குழு கேட்டுக் கொள்கிறது.

இதில் மாவட்ட கழக நிர்வாகிகள், ஒன்றிய - நகர- பேரூர் கழக செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் தொகுதி பார்வையாளர்கள், கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!