நறுவீ மருத்துவமனை தலைவர். ஜி .வி. சம்பத் வரலாற்று சாதனை!!


உலக அளவில் புகழ்பெற்ற வேலூர் நறுவீ மருத்துவமனைமருத்துவ சேவையில் மகத்தானசாதனைகள் படைத்திருக்கிறது. வேலூர் மாவட்டம், வேலூர் தாலுகா, தோட்டப்பாளையம் வடக்கு, வேலூர், ஆட்சியர் அலுவலக சாலை, உலக அளவில் புகழ்பெற்ற வேலூர் நறுவீ மருத்துவமனை, மருத்துவ சேவையில் மகத்தான வரலாற்று சாதனைகள் படைத்து வருகிறது. வேலூரில், சுமார் 4 ஆண்டுகளைக் கடந்து வெற்றிகரமாக பயணித்து வரும் நறுவீ மருத்துவமனை உலகத்தில் கவனத்தை ஈர்ப்பதாக அமைந்துள்ளது. வேலூர் மற்றும் சுற்றுப்புற நகரங்கள் மற்றும் மாவட்ட மக்கள் தங்கள் மருத்துவ தேவைக்காக சென்னை உள்ளிட்ட புது நகரத்திற்கு செல்ல வேண்டிய கட்டாயத்தை முற்றிலுமாக நீக்கியுள்ளது. நறுவீ மருத்துவமனை என்று மருத்துவமனை தலைவர் முனைவர். ஜி.வி.சம்பத் என்று பெருமையாக தெரிவித்துள்ளார். பெங்களூரு - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உலகத்தரம் வாய்ந்த நறுவீ சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை இயங்கி வருகின்றது. சுமார் ஐந்து லட்சம் சதுர அடியில் மிகப் பிரம்மாண்டமான வடிவமைப்பில் உலக அளவில் போற்றக்கூடிய சர்வதேச அளவிலான தொழில்நுட்பத்தில் முதலிடம் பிடித்துள்ளது. நறுவீ மருத்துவமனை சர்வதேச அளவில் பல்வேறு நாடுகளிலிருந்து உலகத்தரம் கொண்ட மருத்துவ சாதனங்களுடன் 500க்கும் மேற்பட்ட படுக்கை வசதிகள் கொண்டுள்ளது. இதில் 100க்கும் மேற்பட்ட படுக்கைகள் தீவிர கண்காணிப்பு பிரிவை சேர்ந்தவை என்பது குறிப்பிடத்தக்கது. 250க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் மற்றும் அறுவை சிகிச்சை நிபுணர்கள் இங்கு சிறந்த சாதனைகளைப் படைத்து வருகின்றனர். 300க்கும் மேற்பட்ட மருத்துவ உதவி குழுவினர் கொண்டு சுமார் 1000 பணியாளர்களுடன் வெற்றிகரமாக பல்வேறு சாதனைகள் படைத்து, இம்மருத்துவமனை வெற்றிகரமாக இயங்கி வருகிறது.

நறுவீ மருத்துவமனையில் உள்ள சிறப்பு மருத்துவ சிகிச்சை பிரிவுகள், 1. இருதய நோய், இருதய அறுவை சிகிச்சை மற்றும் இருதய மாற்று அறுவை சிகிச்சை, 2. நுரையீரல் நோய், நுரையீரல் அறுவை சிகிச்சை மற்றும் நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை, 3. கல்லீரல் நோய், கல்லீரல் அறுவை சிகிச்சை மற்றும் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை, 4. சிறுநீரக நோய், சிறுநீரக அறுவை சிகிச்சை மற்றும் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை, 5. மகப்பேறு மற்றும் மகளிர் மருத்துவம், 6. உட் சுரப்பிகளுக்கான சிகிச்சை,7. பச்சிளம் குழந்தைகளுக்கான தீவிர சிகிச்சை, 8. குழந்தைகளுக்கான தீவிர சிகிச்சை, 9. எலும்பியல் நோய் மற்றும் அறுவை சிகிச்சை, 10. நரம்பியல் நோய் மற்றும் அறுவை சிகிச்சை, 11. பிளாஸ்டிக் மற்றும் மறு சீரமைப்பு அறுவை சிகிச்சை (தீ காயங்கள் உட்பட) 12. சிறு நீரியல் நோய் மற்றும் அறுவை சிகிச்சை, 13. குடல் வயிறு சம்பந்தப்பட்ட நோய் மற்றும் அதற்கான அறுவை சிகிச்சை ஆகிய மருத்துவ சிகிச்சைகள் அனைத்தையும் சூப்பர் ஸ்பெஷாலிட்டி சிறப்புமிகு தரம் கொண்ட மருத்துவமனையாக இடம்பெற்றுள்ளது. இந்த மருத்துவமனையில் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்காக சிறப்பு பிரிவு ஒன்று அண்மையில் தொடங்கப்பட்டுள்ளது. கல்லீரல் சிகிச்சை அறுவை சிகிச்சை மற்றும் மாற்று அறுவை சிகிச்சையில் புகழ்பெற்ற எல் க்யூப் (L CUBE) மருத்துவக் குழுவுடன் நறுவீ மருத்துவமனை ஒப்பந்தம் செய்துள்ளது. இதன்மூலம் கல்லீரல் சம்பந்தமான அனைத்து சிகிச்சைகளும் சிறப்பான முறையில் மருத்துவம் அளிக்கப்பட்டு வருவது சாதனைக்குரியதாகும். 


நறுவீ மருத்துவமனையில் 24 மணி நேர விபத்து மற்றும் அவசர சிகிச்சை, நெஞ்சு வலி, பக்கவாதம், உள்ளிட்டவைகளுக்கான அவசர சிகிச்சை, அதி தீவிர சிகிச்சை பிரிவு, ஆகியவை மிக சிறந்த முறையில் இயங்கி வருகின்றது. மேலும், மூட்டு வலி சிகிச்சை, பல் மருத்துவம், தோல் நோய் சிகிச்சை கண் மருத்துவம் மாற்று மருத்துவம் முதியோர் சிறப்பு சிகிச்சை உள்ளிட்ட 25 மேற்பட்ட சிறப்பு மருத்துவர் வசதிகள் கொண்ட இடமாக இம்மருத்துவமனை அமைந்துள்ளது. இங்கு எக்ஸ்ரே, ஸ்கேன் அனைத்தும் பேப்பர் பிலிம் இல்லாமல் நவீன டிஜிட்டல் முறையில் எடுக்கப்படுகிறது அதிநவீன ஆடியோ மற்றும் வீடியோ வசதிகளுடன் மூன்று டெஸ்லா திறன் கொண்ட மேம்பட்ட தொழில் நுட்ப வசதியுடன் அகலமான குழாய் வடிவம் கொண்ட (MRI) scan எம் ஆர் ஐ ஸ்கேன் 128 பாகங்களாக பிரித்து காட்டும் தொழில்நுட்பம் கொண்ட சிடி ஸ்கேன் கருவி உள்ளிட்ட பல்வேறு அதிநவீன சர்வதேச அளவிலான தொழில்நுட்ப வசதிகளுடன் அமைந்துள்ளது.


மேலும், பிரான்ஸ் நாட்டின் ரோசா நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட ரோசா என்ற ரோபோட் மூலமாக மூளை அறுவை சிகிச்சை சிறப்பு வசதி உள்ளது. இந்த வசதி நாட்டில் நறுதி மருத்துவமனை உள்ளிட்ட மூன்று மருத்துவமனைகளில் மட்டுமே உள்ளது. மேலும் தீர்க்க முடியாத நோய் எனப்படும் வலிப்பு நோயின் தன்மையை கண்காணித்து சிகிச்சை அளிக்கும் வசதி இங்கு தொடங்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகின்றது இவ் வசதி நாட்டில் இரண்டு மருத்துவமனைகளில் மட்டுமே உள்ள நிலையில் அது ஒன்றான நம்ம நிறுவீ மருத்துவமனையாக இருப்பது நமக்கு மிகுந்த பெருமை அளிக்கிறது. 


எலும்பு ஸ்திர தன்மையை சோதிக்க டெக்ஸா ஸ்கேன் வசதி மெமோ கிராம் கருவி கொண்டு பெண்களின் மார்பு புற்றுநோயை கண்டறியும் சிறப்பு பரிசோதனை மற்றும் சிறப்பு பிரிவு உள்ளிட்ட பல்வேறு சிறப்பு மருத்துவ வசதிகளை கொண்டதாக நம்ம நிறுவி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை விளங்குகிறது. நறுவீ மருத்துவமனையில் நோயாளிகளின் நலனை மட்டுமே முன்னிறுத்தி மிகவும் எளிய கட்டணங்களுடன் நோயாளிகளுக்கு தனி கவனத்துடன் சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர் என்று நறுவீ மருத்துவமனையின் தலைவர் முனைவர் ஜி.வி.சம்பத் தெரிவித்துள்ளார். இந்த மருத்துவமனை தொடங்கப்பட்டு நான்கு ஆண்டுகளில் சுமார் 7 லட்சம் புறநோயாளிகள் இங்கு சிகிச்சை பெற்று நலமுடன் திரும்பியுள்ளனர். உலக தரத்திலான தொழில்நுட்பங்களை கொண்டுள்ளதால் நறுவீ மருத்துவமனையில் இந்தியா மட்டும் என்று பல்வேறு நாடுகளில் இருந்தும் நோயாளிகள் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். மேலும் நருவி மருத்துவமனை தொடங்கிய குறுகிய காலத்திலேயே இதயம் சிறுநீரகம் கல்லீரல் மற்றும் நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சைகளுக்கான அரசு அங்கீகாரத்தை பெற்று தற்போது இம்ம மருத்துவமனையில் உறுப்பு மாற்று சிகிச்சைகளும் வெற்றிகரமாக செய்யப்பட்டு வருகின்றன. இதன் மூலம் மக்கள் வேலூரிலேயே தங்களுக்கு தேவையான அனைத்து விதமான மருத்துவ சிகிச்சைகளை பெற முடியும். NABH  எனப்படும் மருத்துவமனைகள் மற்றும் சுகாதாரத்திற்கான தேசிய அங்கீகார வாரியத்திடமிருந்து இம்மருத்துவமனை அளிக்கும் சேவைகள் அனைத்திற்கும் ஆன அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதேபோன்று சி எஸ் எஸ் டி என்ற மருத்துவ உபகரணங்களை தொற்று இல்லாமல் சுகாதாரமான முறையில் பராமரிப்பு செய்து வழங்கும் துறையை அங்கீகரித்து சி ஏ எஸ் ஓ எனப்படும் மருத்துவ சேவை கூட்டமைப்பானது சான்றிதழ்களும் வழங்கியுள்ளது. டி என் பி மற்றும் டாக்டர் என் பி எனப்படும் சிறப்பு உயர் சிறப்பு முதுகலை மருத்துவ பட்டப்படிப்புகள் தொடங்குவதற்கு அனைத்து வசதிகளும் உள்ளதா என மத்திய அரசின் இந்திய மருத்துவ கழகம் மற்றும் தமிழ்நாடு அரசின் நிபுணர் குழுவினர் மருத்துவமனையில் ஆய்வு செய்து அனுமதி வழங்கியுள்ளனர். இதனைத் தொடர்ந்து மூன்று ஆண்டு முதுகலை மருத்துவ பட்ட மேற்படிப்புகளுக்கான மருத்துவம் (Anaesthesiology), கதிரியக்கவியல் (Radio diagnosis), மற்றும் மகப்பேறு மகளிர் நலன் (Obstetrics and gynecology), ஆகிய DNB critical care medicine) என்ற (Dr NB ) டாக்டர். என்.பி. படிப்புகள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றது என மருத்துவமனை தலைவர் முனைவர். ஜி.வி.சம்பத் தெரிவித்துள்ளார்.

வேலூர் செய்தியாளர் முபாரக் அலி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!