அரக்கோணம் ஆதிதிராவிடர் நல பெண்கள் மேனிலை பள்ளியில் கலாம் அறக்கட்டளை நடத்திய பாதுகாப்பு விழிப்புணர்வு பிரச்சாரம்!


ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் நகரில் டாக்டர் அப்துல் கலாம் கல்வி  அறக்கட்டளை அதன் தலைவர் டாக்டர் சுகந்தி வினோதினி தலைமையில் செயல்பட்டு வருகிறது இந்த அறக்கட்டளை ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் சந்திரகலா நல்லாசியுடன் மாணவியர் விழிப்புணர்வு பிரச்சாரங்களை அவ்வபோது அரசு பள்ளிகள் தோறும் செம்மையாக நடத்தி வருகிறது அதன் ஒரு பகுதியாக அரக்கோணம் ஆதிதிராவிடர் நல பெண்கள் மேனிலை பள்ளியில் படிக்கும் நூற்றுக்கணக்கான மாணவிகளிடமும் பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தும் தொலைபேசி எண் 1098 குறித்த  பிரச்சாரம் நடத்தினார். இந்த பிரச்சாரத்திற்கு  பள்ளியின் தலைமை ஆசிரியர்  ஜெயஸ்ரீ தலைமை தாங்கினார். அறக்கட்டளை தலைவர் டாக்டர் சுகந்தி வினோதினி நிகழ்ச்சி ஏற்பாடு செய்து மாணவிகள் அனைவரை வரவேற்றார் பின்னர் நிகழ்ச்சியில் நூற்றுக்கணக்கான மாணவியர்களிடமும் ஜாமிண்டி ரி பாக்ஸ் பரிசளித்தார்.அதில் பெண்கள் பாதுகாப்பு தொலைபேசி எண் 1098 அடங்கிய ஸ்டிக்கரை பதிவு செய்திருந்தார் ... இப்பணியில் பள்ளி  பட்டதாரி ஆசிரியர்கள் ரஜினி பிரியா சுகந்தி பிரதீபா கோமதி மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள் அமுதா உதவியாளர் உமா ஆகியோரும் ஈடுபட்டனர்.

அரக்கோணம் செய்தியாளர் ரவி 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!