JAM மகளிர் அரபிக் கல்லூரி மற்றும் JAM சமூக நல அறக்கட்டளை சார்பில் திருமங்கலத்தில் நடைபெற்ற எட்டாம் ஆண்டு நிறைவு விழா மற்றும் முதலாம் ஆண்டு பட்டமளிப்பு விழா!!

மதுரை JAM மகளிர் அரபிக் கல்லூரி மற்றும் JAM சமூக நல அறக்கட்டளை சார்பாக மதுரை திருமங்கலம் பைபாஸ், வலையபட்டி டோல்கேட் அருகில் சௌதாம்மா நினைவு திடலில்  முத்தான முப்பெரும் விழாவான - எட்டாம் ஆண்டு நிறைவு விழா, முதலாம் ஆண்டு பட்டமளிப்பு விழா, பள்ளிவாசல் மற்றும் மதரஸா புதிய கட்டிட அடிக்கல் நாட்டு விழா ஆகிய நிகழ்ச்சிகள் JAM கல்வி குழுமத்தின் நிறுவனர் & தாளாளர் பள்ளப்பட்டி. மௌலானா மௌலவி S.M.முஹம்மது  அல்தாப் அலி உலவி அவர்களின் தலைமையில் நடைபெற்றது, 

விழாவிற்கு செயலாளர் , தாமரைப்பாடி அந்நூர் இஸ்லாமிய கல்லூரி முஹம்மது யாஸீன் ஜமாலி மற்றும் முஹிப்புல் உலமா கீழக்கரை முஹம்மது மஹ்ரூஃப் துபாய் அவர்கள் அடிக்கல் நாட்டினார்கள், வரவேற்புரை. வலையபட்டி ஜும்மா பள்ளிவாசல் தலைமை இமாம் அலாவுதீன் ஹழ்ரத் ஆற்றினார்.

முப்பெரும் விழா சிறப்பான முறையில் நடைப்பெற்றது. 700 க்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர். நன்றியுரை கல்லூரி பேராசிரியர். மௌலானா அப்துர் ரஹீம் அவர்கள் நிறைவு செய்ய மதிய உணவுடன் விழா நிறைவுற்றது.

தேனி செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!