ஐசக் கல்லூரியில் நடைபெற்ற அரசு வேலை வாய்ப்பு முகாம்!!

ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் வட்டம் மஞ்சம்பாடி ஊராட்சி கிராமத்தில் டாக்டர் ஐசக் கல்வி குழும கல்லூரி உள்ளது இங்கு வேலையில்லா மாணவர்களுக்கான வேலை வாய்ப்பு முகாம்  நடைபெற்றது தமிழ்நாடு அரசின் டான்செம்  நிறுவனத்துடன் ஐசக் கல்வி குழுமம் இணைந்து நடத்திய முகாமிற்கு கல்லூரி தாளாளர் டாக்டரை ஐசக் அய்யா தலைமை ஏற்று தொடங்கி வைத்தார்.  முகாமில் டாம் செம் ஆலோசகர் நவாஸ் கான் மற்றும் திட்ட அலுவலர் காயத்ரி உள்ளிட்ட 10 பேர் கொண்ட குழுவினர் கலந்து கொண்டனர்.  10ற்கு மேற்பட்ட அரங்கங்கள் மூலம் குறைந்த கல்வி, உயர் கல்வி படித்தவர்களுக்காக பல்வேறு துறை வேலைகளுக்கு  நேர்காணல் நடைபெற்றது இதில் அதிகம் பெண்கள் தேர்வு செய்யபட்டனர்  முகாம் பணிகளில் துணை சேர்மன் பிரேமாஜசக் மேலாளர் ஜெய்சன் முதல்வர் பாபுஜி தமிவழகன் மற்றும் தேவ சித்தம், தேவசுந்தர், சத்தியா,ஸ்ரீதர்ஆகியோரும்ஈடுபட்டனர்.கல்லூரி சேர்மன் ஐசக் அய்யா செய்தியாளரிடம் கூறிய போது மாணவர்கள் எதிர்காலம் கருத்தில் கொண்டு இது போன்ற வேலைவாய்ப்பு முகாமினை ஐசக் கல்வி குழுமம் சார்பாக தொடர்ந்து நடத்தபடும் என கல்வி குழம தலைவர். ஐசக் அய்யா அறிவித்தார்.

அரக்கோணம் செய்தியாளர் ரவி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!