அமைச்சர் எம். ஆர். கே. பன்னீர் செல்வத்திற்கு பிறந்தநாள் வாழ்த்து!!

கடலூர் மாவட்டம், இன்று பிறந்தநாள் காணும் அமைச்சர். எம். ஆர். கே. பன்னீர்செல்வம் அவர்களுக்கு நிலவன் டிவியின் சார்பில் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள். இன்று பிறந்தநாள் காணும் எம் ஆர் கே பன்னீர்செல்வம் அவர்களைப் பற்றிய ஒரு சிறு குறிப்பு! கடலூர் மாவட்ட மண்ணின் மைந்தர்.எம். ஆர். கே. பன்னீர்செல்வம்  என்பவர் ஒரு தமிழக அரசியல்வாதி மற்றும் தமிழக வேளாண் துறையின் அமைச்சராவார். இவர் 2006ல் அமைக்கப்பட்ட மு.கருணாநிதி தலைமையிலான அமைச்சரவையில் சுகாதாரத்துறை அமைச்சராக பணியாற்றினார்.கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோயில் அடுத்த முட்டத்தில் 25 ஆகத்து 1957இல் பிறந்த இவர் இளங்கலை படிப்பாக சட்டப்படிப்பை படித்தவர். இவர் தமிழக சட்டசபைக்கு மூன்று முறை தி.மு.க சார்பில் குறிஞ்சிப்பாடி தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர். இவர் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக 11வது சட்டசபை காலத்தில் இருந்தார்..[2][3] 2021 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் குறிஞ்சிப்பாடி சட்டமன்ற உறுப்பினராக மீண்டும் தேர்ந்தெடுக்கபட்டார். இதையடுத்து 2021 மே 7 அன்று வருவாய்த்துறை மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை (வேளாண்மை - உழவர் நலத்துறை, வேளாண்மை பொறியியல்,வேளாண் பணிக்கூட்டுறவு சங்கங்கள், தோட்டக்கலை, கரும்புத்தீர்வை) அமைச்சசராக பதவியேற்றார்.[4] இவர் மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்ததாக பரங்கிப்பேட்டை நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. இவரின் அக்காள் மங்கையர்க்கரசி சிதம்பரம் நகராட்சியில் துணைத் தலைவராக இருந்தார்.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!