அரக்கோணம் டவுன் ஹாலில் நடைபெற்ற அன்னதானம்!!


ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அரசு மருத்துவமனை எதிரில் தி டவுன் ஹால் சங்கம் உள்ளது. மிகவும் பழமை மிக்க இச்சங்கத்தின்  புதிய நிர்வாகிகள் நடந்து முடிந்த தேர்தலில் தேர்ந்தெடு க்கப்பட்டனர். இந்நிலையில் புதிய நிர்வாகம் சார்பில் வாரம்தோறும்  அன்னதானம் வழங்க முன் வந்தது அதன்படி நேற்று  சங்க தலைவர் ஜி.கே. பாபு ஜீ தலைமையில் சிறப்பு விருந்தினராக பொது செயலாளர். டாக்டர் பன்னீர் செல்வம் கலந்து கொண்டு ஜிவி ஜெய்சங்கர் பிறந்த நாளை முன்னிட்டு வழங்கபடும் அன்னதானத்தை

துவக்கி வைத்தார். முன்னதாக பொதுச் செயலாளர். பன்னீர்செல்வம் மற்றும் ஜி.வி. ஜெய்சங்கருக்கு சமூக நல பொறுப்பாளர். முருகவேல் மற்றும் பூக்கடை சாய்  பொன்னாடை போர்த்தி வரவேற்றனர். நிகழ்ச்சியில் அதிமுக நகர செயலாளர். பாண்டுரங்கன் முன்னாள் கவுன்சிலர். எஸ்.சரவணன் உட்பட சங்க நிர்வாகிகள் செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் அங்கத்தினர்கள் பலர் திரளாக கலந்து கொண்டு அன்னதானம் வழங்கினர்.

அரக்கோணம் செய்தியாளர் ரவி.

கருத்துகள்