பெ. வடிவேலு தலைமையில் நடைபெற்ற நெமிலி கிழக்கு ஒன்றிய தி.மு.க சார்பில் மக்களுடன் ஸ்டாலின் உதவி மையம்!!

நெமிலி ஊராட்சி ஒன்றியத்தில், கணபதிபுரம் ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற்றது. இதில் தமிழக அரசின் அனைத்து துறைகளின் சார்பிலும் அதிகாரிகள் கலந்து கொண்டு, பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றனர். இதில் கணபதிபுரம், சித்தூர், முருங்கை, பின்னாவரம், மாங்காட்டுச்சேரி ஆகிய கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கை மனுக்களை அளித்தனர்.

இந்த முகாமின் போது, திராவிட முன்னேற்ற தலைமை கழகத்தின் அறிவுறுத்தலின் படி, நெமிலி கிழக்கு ஒன்றிய தி.மு.க சார்பில் உங்களுடன் ஸ்டாலின்உதவிமையம்அமைக்கப்பட்டிருந்தது.அதில் தன்னார்வல தொண்டர்கள் ஈடுபட்டு, முகாமில் மனுக்களை கொடுக்க வந்த பொதுமக்களுக்கு உதவிகரமாக, கோரிக்கைள் அடங்கிய மனுக்களை எழுதிக்கொடுத்துஉதவிசெய்தனர்.மேலும் முகாமிற்குவருகின்றபொதுமக்களுக்கு குடிநீர், குளிர்பானங்கள், தேநீர் போன்றவற்றை வழங்கி, அவர்களை இன்முகத்தோடு வரவேற்றனர்.

இந்த முகாமில், நெமிலி கிழக்கு ஒன்றிய திமுக கழகச் செயலாளரும், நெமிலி ஒன்றிய பெருந்தலைவருமான பெ.வடிவேலு அவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

மேலும் இந்நிகழ்ச்சியில், கோட்டாட்சியர், வட்டாட்சியர், நெமிலி வட்டார வளர்ச்சி அலுவலர்கள், நெமிலி மத்திய ஒன்றிய செயலாளர். எஸ். ஜி. சி. பெருமாள், கணபதிபுரம் ஒன்றிய குழு உறுப்பினர், சரஸ்வதி பார்த்திபன், துணைத் தலைவர் சேகர், மற்றும் நிர்வாகிகள் நரசிம்மன் ஆனந்தன், சம்பந்தன், கிருஷ்ணன், சுதர்சன், ரோஷன், பரத்ராஜ், லட்சுமிபதி, லோகநாதன் மற்றும் தமிழ்ச்செல்வன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

அரக்கோணம் செய்தியாளர் ரவி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!