ராணிப்பேட்டை அருகே தண்டலம் பகுதியில் உள்ள ஸ்ரீதேவி கருமாரியம்மன் ஆலயத்தில் நடைபெற்ற 85 ஆம் ஆண்டு கூழ் வத்தல் மற்றும் பொங்கல் இடம் திருவிழா!!

ர்ராணிப்பேட்டை மாவட்டம்,நவல்பூர் அடுத்த தண்டலம் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீதேவி கருமாரி அம்மன் ஆலயத்தில் 85 ஆம் ஆண்டு கூழ்வார்த்தல் பொங்கலிடும் திருவிழா! மூன்று நாட்கள் நடைபெறும் நிலையில்  இன்று முதல் நாள் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் அருள்மிகு ஸ்ரீதேவி கருமாரி அம்மன் காட்சியளிக்க பாலாற்றங்கரையிலிருந்து பல வகை மேல தாளங்களுடன் ஜலம் திரட்டி பால்குடம் எடுத்தல் நிகழ்ச்சி நடைபெற்றது

இந்த நிகழ்ச்சியினை அதிமுக ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட  செயலாளர் எஸ் எம் சுகுமார் தொடங்கி வைத்தார்.ராணிப்பேட்டை நவல்பூர் போன்ற முக்கிய வீதிகளின் வழியாக பால்குட ஊர்வல நிகழ்வு பல வகையான மேளதாளங்கள் முழங்க நடைபெற்றது அப்போது ஏராளமான பக்தர்கள் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் காட்சியளித்த அருள்மிகு ஸ்ரீதேவி கருமாரி அம்மனை வணங்கி வழிபட்டனர்

இந்தபால்குடஊர்வலநிகழ்ச்சிஇறுதியாக தண்டலம் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீதேவி கருமாரி அம்மன் ஆலயத்தில் நிறைவடைந்து பின்னர் பக்தர்கள் சுமந்து வந்த பால்குடங்கள் அனைத்தும் ஒன்றின் பின் ஒன்றாக அம்மன் மீது ஊற்றப்பட்டு மகா பாலபிஷேகம் நடைபெற்றது.

அப்போது பக்தர்கள் பக்தி கோஷங்களை எழுப்பி அம்மனை பக்தியுடன் வேண்டி வழிபாட்டில் ஈடஇந்த நிகழ்ச்சியின் போது தலைமை நாட்டாமை என். கிரிகுமரன் மற்றும் நாட்டாமை தாரர்கள் விழா குழுவினர்கள் இளைஞர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் என பல உடனிருந்தனர்.

ராணிப்பேட்டை செய்தியாளர் சிவகுமார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!