விழுப்புரம் அருகே முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரியில் சிறப்பு நூலகத்தினை காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்த தமிழக முதல்வர். மு. க. ஸ்டாலின்!!


விழுப்புரம் மாவட்டம்,தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையிலிருந்து, காணொளி காட்சி வாயிலாக பொது நூலக இயக்ககம் சார்பில் விழுப்புரம் மாவட்டம், 

முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனை வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு நூலகத்தினை திறந்து வைத்ததை தொடர்ந்து,மாவட்ட ஆட்சித்தலைவர். ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் சிறப்பு நூலகத்தில் குத்துவிளக்கேற்றி வைத்து, நூலகத்தினை பார்வையிட்டார்.

உடன் உதவி ஆட்சியர் (பயிற்சி) ரா.வெங்கடேஷ்வரன் முதல்வர், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனை மரு.கீதாஞ்சலி, மருத்துவநிலைய அலுவலர். மரு.ரவிக்குமார், மருத்துவ கண்காணிப்பாளர். மரு.கணேஷ்குமார், உதவி மருத்துவ நிலைய அலுவலர். வெங்கடேசன், மாவட்ட நூலக அலுவலர் (பொ)மு.காசீம், மாவட்ட மைய நூலகர். இளஞ்செழியன் உட்பட பலர் உடன் இருந்தனர். 

விழுப்புரம் மாவட்ட செய்தியாளர் விஜய்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!