அரக்கோணத்தில் தவெக தலைவர் விஜய் பிறந்த நாள் விழா!ஸ்ரீ அங்காளம்மன் ஆலயத்தில் சிறப்பு வழிபாடு மற்றும் அன்னதானம் வழங்கிக் கொண்டாட்டம் !!


ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் பழனிப்பேட்டையில் ஸ்ரீஅங்காளம்மன் ஆலயம் உள்ளது இங்கு த வெக நிர்வாகிகளால் அம்மனுக்கு  சிறப்பு வழிபாடு மற்றும் அன்னதானம் நடைபெற்றது. தமிழக வெற்றி கழகத்தின்  தலைவரும், நடிகருமான  விஜய்யின் 51 வது பிறந்த நாள் வெகு விமர்சையாக தமிழகமெங்கும் 22ந்தேதி கொண்டாடப்பட்டு வருகிறது அதன் ஒரு பகுதியாக அரக்கோணம் நகரிலும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. 

இதற்காக  ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வுகளில் ராணிப்பேட்டை மாவட்ட செயலாளரும், அரக்கோணம் நகர மன்ற உறுப்பினருமான காந்திராஜ் கலந்து கொண்டார். இவர் ஸ்ரீ அங்காள அம்மன் ஆலய தலைமை பூசாரி மணி நடத்திய  வழிபாட்டில் கலந்து கொண்டு  அன்னதானத்தை  வழங்கினார். இந்நிகழ்ச்சியில் அரக்கோணம் நகர நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர். பின்னர் அரக்கோணம் சோளிங்கர் சட்டமன்ற தொகுதியில் நூற்றுக்கணக்கான நிகழ்ச்சிகளிலும் ராணிப்பேட்டை மாவட்ட செயலாளரும், அரக்கோணம் நகர மன்ற உறுப்பினருமான காந்திராஜ் கலந்து கொண்டார்.

அரக்கோணம் செய்தியாளர் ரவி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!