கரூர் மாநகராட்சியில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணியை துவக்கி வைத்த முன்னாள் அமைச்சர். செந்தில் பாலாஜி!!
கரூர் மாவட்டம், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர். மு .க. ஸ்டாலின் அவர்களின் நல்லாசிகளுடன், கரூர் சட்டமன்ற தொகுதி, கரூர் மாநகராட்சி வார்டு எண் 3, வி.வி.ஜி நகர், ஜவகர் நகர், காமராஜ் நகர், கலைஞர் சாலை, பூங்குயில் நகர் முதலிய பகுதிகளில், மழை நீர் வடிகால் அமைக்கும் பணிகளை முன்னாள் அமைச்சரும் கரூர் மாவட்ட திமுக செயலாளர் மற்றும் கொங்கு மண்டல தேர்தல் பொறுப்பாளருமான செந்தில் பாலாஜி அவர்கள் மழை நீர் வடிகால் அமைக்கும் பணிகளை துவக்கி வைத்தார்.
இந்நிகழ்வில் கரூர் மாவட்ட ஆட்சியர். மீ.தங்கவேல் இ.ஆ.ப., உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் கலந்துக்கொண்டனர்.
கரூர் மாவட்ட செய்தியாளர் சக்திவேல்.


கருத்துகள்
கருத்துரையிடுக