நெமிலி அருகே சையனபுரம் ஊராட்சியில் கலைஞரின் 102 வது பிறந்தநாள் விழா! எஸ்.ஜி சி.பெருமாள் பங்கேற்பு!!



ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி ஒன்றியத்திற்குட்பட்ட சயனபுரம் கிராமத்தில் நெமிலி மத்திய ஒன்றிய திமுக சார்பில் நெமிலி மதிய ஒன்றிய திமுக செயலாளர். எஸ்.ஜி.சி பெருமாள் தலைமையில் முன்னாள் முதல்வர். முத்தமிழ் அறிஞர் கலைஞர், கருணாநிதியின் 102வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. 



அவரது திருஉருவ படத்திற்கு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட மாவட்ட மகளிர் அணி துணை அமைப்பாளரும், ஊராட்சி குழு உறுப்பினருமான சுந்தராம்பாள் பெருமாள் மாலை அணிவித்து மலர் தூவி 500 மீட்டர் ஊர்வலமாக வந்து பட்டாசு வெடித்து இனிப்பு மற்றும் 500 பேருக்கு அன்னதானம் வழங்கி பள்ளி மாணவ மாணவி குழந்தைகளுக்கு நோட்டு புத்தகம் மற்றும் கல்வி உபகரணங்கள் வழங்கி கொண்டாடப்பட்டது. 



இந்த நிகழ்வில் அவைத்தலைவர். நரசிம்மன், துணைச் செயலாளர். சீனிவாசன், எல்லப்பன், வழக்கறிஞர் ஜானகி, ராஜேஷ், சதீஷ் உள்ளிட்ட திமுக கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் இதில் திரளானோர் கலந்து கொண்டனர்.

 ராணிப்பேட்டை மாவட்ட செய்தியாளர் மு. பிரகாசம்

கருத்துகள்