கடலூர் அருகே ஸ்ரீ முஷ்ணம் To அரியலூர் செல்லும் சாலையில் வாகன தணிக்கையில் பிடிப்பட்ட 110 கிலோ போதைப்பொருள் காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை!


கடலூர் மாவட்டம் கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் S. ஜெயக்குமார் IPS அவர்கள் போதை பொருட்களை கடத்தி விற்பனை செய்யும் நபர்களை  கண்காணித்து கைது செய்து நடவடிக்கை எடுக்குமாறு பிறப்பித்த உத்தரவின்பேரில் சேத்தியாதோப்பு துணை காவல் கண்காணிப்பாளர் திரு. விஜிகுமார் அவர்கள் மேற்பார்வையில், ஸ்ரீமுஷ்ணம் காவல் ஆய்வாளர். வீரசேகரன், காவல் கண்காணிப்பாளர் அவர்களின் தனிப்படை உதவி ஆய்வாளர்  ராஜா மற்றும் போலீசார் ஸ்ரீமுஷ்ணம் To அரியலூர் செல்லும் சாலையில்  வாகன தணிக்கையில் இருந்தபோது, வந்த Santro கார் மற்றும் TN  MAHINDRA Auto வாகனங்களை நிறுத்தி சோதனை செய்தபோது 110 கிலோ போதை குட்கா பொருட்கள் இருந்தது. கார், Auto மற்றும் போதை பொருட்களை கைப்பற்றி  1. வெங்கடேசன் வயது 48, , ஸ்ரீமுஷ்ணம், 2. கிளின்டன்ராஜ் வயது 27,  ஆண்டிமடம், அரியலூர், 3. சுரேஷ் வயது 30, , ஸ்ரீமுஷ்ணம், 4. மணிகண்டன் வயது 2 ஸ்ரீமுஷ்ணம் ஆகியோர்களை கைது செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன் 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!