அரக்கோணத்தில் தலித் இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில் நடைபெற்ற பஞ்சமி நிலமீட்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்!

அரக்கோணம் மே 28

ராணிப்பேட்டை மாவட்டம்,அரக்கோணம் பழைய பேருந்து நிலையம் அம்பேத்கர் சிலை அருகில் நைனா, மாசிலாமணி, ஏபி, எம்.சீனிவாசன், கலைமணி, சி.மோகன், ஈஸ்வரன், குருவை குமார், மோசூர் ராஜேஷ், தனஞ்செழியன், அகில இந்திய ஜனநாயக மக்கள் கட்சி   மாவட்ட செயலாளர்உட்பட பலர் கலந்து கொண்டனர் .

சிறப்பு அழைப்பாளராக அகில இந்திய ஜனநாயக மக்கள் கட்சி தலைவர். டாக்டர். ஐசக்.அய்யா கலந்து கொண்டு பேசினார் அப்போது பேசியவர்கள் அரசே! 12 லட்சம் ஏக்கர் பஞ்சமி நிலங்களை மீட்டு ஆதிதிராவிட மக்களுக்கு பட்டா செய்து கொடு பஞ்சமி நிலங்களை பாதுகாக்க சிறப்பு சட்டம் இயற்ற வேண்டுமென சென்னை உயர்நீதிமன்றம் தமிழ்நாடு அரசுக்கு வழங்கிய உத்தரவை நடைமுறை படுத்துக!

ஆதிதிராவிட மக்கள் அனைவரின் வாழ்விடங்களுக்கும் குடிக்க தண்ணீர், குடியிருக்க வீடு, மற்றும் 'பிணம் புதைக்க சுடுக்காடு'/ பாதை உறுதிபடுத்துக! அனைத்து தரிசு நிலங்களையும் மீட்டு  பட்டா வழங்கிடு என வலியுறுத்தி பேசினர்! கண்டன கோஷங்களுடன் ஆர்பாட்டம் நிறைவு பெற்றது.

அரக்கோணம் செய்தியாளர் ரவி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!