பண்ருட்டி திராசு பசுபதீஸ்வரர் கோயில்களில் குருபெயர்ச்சி சிறப்பு யாகம்!

பண்ருட்டி கோயில்களில் குருபெயர்ச்சியை ஒட்டி சிறப்பு யாகம் நடந்தது. குரு பகவான் இன்று  11-05-2025 மதியம் 1:19 மணிக்கு   ரிஷப ராசியில் இருந்து மிதுன ராசிக்கு  பெயர்ச்சி அடைந்தார். இதையொட்டி  பண்ருட்டிகோவிலில் குரு பெயர்ச்சி விழா சிறப்பாக நடைபெற்றது. கடலூர் மாவட்டம் பண்ருட்டி திராசு பசுபதீஸ்வரர் கோவிலில், சிறப்பு யாகம் மற்றும் பூஜை நடந்தது. இதில் குருபகவானுக்கு மஞ்சள் உடை அணிவித்து, கொண்டை கடலை மாலை சூட்டப்பட்டது. யாகத்தில் திரளாக பங்கேற்ற பக்தர்கள் பழம், தானியம், பூ ஆகிய பொருள்களை யாக குண்டத்தில் போட்டு குருபகவானை வழிபட்டனர்.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன் 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!