பண்ருட்டி அருகே அரசூரில் வாகன தணிக்கையில் பிடிப்பட்ட 10 மூட்டை ஹான்ஸ் பாக்கெட் காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை!


கடலூர் மாவட்டம் பண்ருட்டி காவல் ஆய்வாளர் மற்றும் காவல் உதவி ஆய்வாளர் மற்றும் காவலர்கள் சகிதம் நேற்று இரவு 08.00 மணி அளவில் பண்ருட்டி லிங்க் ரூட் அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தபோது அரசூரில் இருந்து கடலூர் மார்க்கமாக வந்து கொண்டிருந்த KA 29 N 0065 டவேரா காரை நிறுத்தியபோது காரின் ஓட்டுனர் நிறுத்தாமல் செல்லவே சந்தேகம் அடைந்து அந்த காரை துரத்தி மடக்கிப் பிடித்த போது அதிலிருந்து மூன்று நபர்கள் இறங்கி ஓடி விட்டார்கள் மற்ற இருவரையும்  மடக்கிப் பிடித்து விசாரிக்க

1.பிரசாத் வயது 35 தந்தை பெயர் சந்திரப்பா வெண்ணுகாம்பல் கிராமம் சித்தூர் மாவட்டம் குப்பம் தாலுகா ஆந்திரா மாநிலம்

2. விஷால் ராஜ் வயது 25 தந்தை பெயர் ஞானசேகர் 

சின்னபுத்தூர் கிராமம் எனவும் தப்பித்து ஓடிய மூவரும் தனது உறவினர் என்றும் லட்சுமிபதி திருப்பதி முனிராஜ் என்றும் ஆந்திரா குப்பத்தை சேர்ந்தவர்கள் என்றும் கூறினார். வாகனத்தை சோதனை செய்த போது அதில் பத்து மூட்டையில் ஹான்ஸ் பாக்கெட்டுகள் இருந்தது தெரிய வந்தது மதிப்பு 75 ஆயிரம் வாகனம் செல்போன் ஆர்ச் மூட்டைகள் பறிமுதல் செய்து வந்து வழக்கு பதிவு செய்து எதிரிகளை நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன் 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!