பண்ருட்டி மகளிர் அணி துணை செயலாளர். சத்யா பன்னீர்செல்வம் அவர்கள் முன்னிலையில் நடைபெற்ற பாமக, திமுக மற்றும் மாற்றுகட்சியை சேர்ந்தவர்கள் அதிமுக கழகத்தில் இணைப்பு விழா!


கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் பாமக,திமுக மற்றும் மாற்றுகட்சியை சேர்ந்த 610 பேர் அ.தி.மு.கழக பொதுச்செயலாளர் மாண்புமிகு எடப்பாடியார் அவர்களின் தலைமையை ஏற்று…அதிமுக மகளிரணி துணைச்செயலாளர் பண்ருட்டி சத்யாபன்னீர்செல்வம் EX MLA அவர்களின் சிறப்பான ஏற்பாட்டில்…அ.இ.அண்ணா தி.மு.கழகத்தில் இணைந்தனர். 

கடலூர் மாவட்டம் பண்ருட்டி சட்டமன்ற தொகுதியில் மதியம் 4.00 மணியளவில் பண்ருட்டி திருவதிகை S.V.மஹாலில் பாமக,திமுக மற்றும் மாற்றுகட்சியை சேர்ந்த 610 பேர் அ.தி.மு.கழக பொதுச்செயலாளர் "புரட்சித்தமிழர்" மாண்புமிகு எடப்பாடியார் அவர்களின் தலைமையை ஏற்றுஅதிமுக மகளிரணி துணைச்செயலாளர் பண்ருட்டி சத்யாபன்னீர்செல்வம் EX MLA அவர்களின் சிறப்பான ஏற்ப்பாட்டில்கழக சிறுபான்மையினர் நலப்பிரிவு செயலாளர், கடலூர் வடக்கு மாவட்ட பொறுப்பாளர்,முன்னாள் அமைச்சர் S.அப்துல்ரஹீம், கடலூர் வடக்கு மாவட்ட கழக செயலாளர், முன்னாள் அமைச்சர் எம்.சி.சம்பத், மாவட்ட அம்மா பேரவை முன்னாள் செயலாளர், பண்ருட்டி முன்னாள் நகரமன்ற தலைவர் P.பன்னீர்செல்வம் ஆகியோரது முன்னிலையில்,கடலூர் வடக்கு மாவட்ட  வன்னியர் சங்க செயலாளர் மு.உதயா தலைமையில் மாற்று கட்சிகளில் இருந்து  610 பேர்கள் தங்களை அ.இ.அண்ணா தி.மு.கழகத்தில் இணைத்துக் கொண்டனர். 

கழகத்தில் இணைந்த அனைவருக்கும் கழக சால்வை அணிவிக்கப்பட்டு வாழ்த்துகளை பெற்றுக் கொண்டன கழகத்தில் இணைந்தவர்கள், 2026 ல் தமிழகத்தில் 'புரட்சித்தமிழர்' எடப்பாடியார் அவர்களை முதலமைச்சராக்க அயராது பாடுபடுவோம் என உறுதி ஏற்றுக்கொண்டனர். இந்நிகழ்ச்சியில் மாவட்ட, ஒன்றிய, நகர,பேரூராட்சி வார்டு,கிளை-கழகம் மற்றும் சார்பு அணி நிர்வாகிகள், முன்னாள் மாவட்ட கவுன்சிலர்கள் , முன்னாள் ஒன்றிய கவுன்சிலர்கள்,முன்னாள் கூட்டுறவு சங்க தலைவர்கள் இந்நாள் முன்னாள் நகர பேரூர் மன்ற உறுப்பினர்கள், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர்கள்,கழக செயல்வீரர்கள் வீராங்கனைகள் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன் 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!