2023-24 ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களுக்கு வழங்கப்பட்ட 19 விருதுகளை தமிழக முதல்வரிடம் காண்பித்து வாழ்த்து பெற்ற போக்குவரத்து துறை!



மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்களை  தலைமைச் செயலகத்தில் சந்தித்து, அனைத்து இந்திய மாநில சாலைப் போக்குவரத்துக் கழகங்களின் கூட்டமைப்பு (ASRTU) மூலமாக வழங்கப்படும் 2023-24 ஆண்டிற்கான தேசிய பொதுப் பேருந்து போக்குவரத்து செயல்திறன் மேம்பாட்டிற்கான சிறப்பு விருதுகளில், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு வழங்கப்பட்ட 19 விருதுகளை காண்பித்து வாழ்த்து பெற்றனர். 

இந்நிகழ்வில் தலைமைச் செயலாளர் நா.முருகானந்தம், இ.ஆ.ப., போக்குவரத்துத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் க. பணீந்திர ரெட்டி, இ.ஆ.ப., மாநகர் போக்குவரத்துக் கழக மேலாண்மை இயக்குநர் பிரபு சங்கர், இ.ஆ.ப., தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களின் மேலாண் இயக்குநர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!