கோவை - வள்ளிகும்மி கின்னஸ் சாதனை புரிந்த 16,000 பெண்களுக்கான பாராட்டு விழா முதல்வர் மு.க ஸ்டாலின் பங்கேற்பு!


கோவை மாவட்டம் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்கள் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி மற்றும் கொங்குநாடு கலைக்குழு இணைந்து, கோவை - கொடிசியா மைதானத்தில் நடத்திய, வள்ளிகும்மி கின்னஸ் சாதனை புரிந்த 16,000  பெண்களுக்கான பாராட்டு விழாவில் கலந்துக்கொண்டு பாராட்டுக்களை தெரிவித்தார். 

இந்த நிகழ்வில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளர்,  மாண்புமிகு சட்டமன்ற உறுப்பினர் ஈ.ஆர்.ஈஸ்வரன் அவர்கள் ஏற்பாடு செய்திருந்த இந்த மாபெரும் நிகழ்வில் மின்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைதுறை அமைச்சர். செந்தில் பாலாஜி, திமுக கழக துணைப் பொதுச் செயலாளர், மக்களவை உறுப்பினர் ஆ. ராசா, பொதுப் பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் , மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் , மனிதவள 

மேலாண்மைத்துறை அமைச்சர், சகோதரி N. கயல்விழி செல்வராஜ், நாமக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் V.S. மாதேஸ்வரன், அரசு தலைமை கொறடா கே. ராமச்சந்திரன், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொருளாளர் கே.கே.சி.பாலு , ஆர். தேவராஜன், தலைவர், கொங்கு வேளாளக் கவுண்டர்கள் பேரவை, கொ.ம.தே.க துணை பொதுச்செயலாளர்கள். பொள்ளாச்சி நித்யானந்தம், நடராஜன், இளைஞர் அணி செயலாளர் சூரியமூர்த்தி, திமுக கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் இதில் கலந்துக்கொண்டனர்.

மாவட்ட செய்தியாளர் சக்திவேல் 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!