கோவை வடக்கு மாவட்ட திமுக சார்பில் தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதியில் 11,072 நபர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா அமைச்சர் செந்தில் பாலாஜி பங்கேற்பு!


கோவை மாவட்டம் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்களின் 72வது பிறந்த நாளை கொண்டாடும் வகையில், மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர். உதயநிதி ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படி,  கோவை வடக்கு மாவட்ட திமுக சார்பில்,  தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதியில்,  11072 நபர்களுக்கு 

மாபெரும் நலத்திட்டங்கள் வழங்கும் விழாவும்,  கோவை வடக்கு மாவட்டச் செயலாளர் அ.ரவி அவர்கள் தலைமையில், திமுக கழக மாணவரணிச் செயலாளர். ராஜீவ்காந்தி அவர்கள் சிறப்புரையாற்ற,  பிரம்மாண்ட பொதுக்கூட்டமும் கோவைப்புதூர் ஏ மைதானத்தில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக மின்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைதுறை அமைச்சர். செந்தில் பாலாஜி அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இந்த நிகழ்வில், மாண்புமிகு கோவை மக்களவைத் தொகுதி உறுப்பினர். 

கணபதி பி.ராஜ்குமார் அவர்கள்,  மாண்புமிகு பொள்ளாச்சி மக்களவை உறுப்பினர் கே.ஈஸ்வரசாமி அவர்கள்,  கோவை மேயர் ரங்கநாயகி அவர்கள்,  கோவை மாநகர் மாவட்டச் செயலாளர் நா.கார்த்திக் அவர்கள், கோவை தெற்கு மாவட்டச் செயலாளர்.தளபதி முருகேசன் அவர்கள்,  உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், திமுக கழக நிர்வாகிகள்,  தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் இதில் கலந்து கொண்டனர்.

மாவட்ட செய்தியாளர் சக்திவேல் 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!