நெமிலியில் தமிழக முதல்வரின் பிறந்தநாள் விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா அமைச்சர் ஆர். காந்தி பங்கேற்பு!
இராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் சட்டமன்றத் தொகுதி நெமிலி கிழக்கு ஒன்றிய தி.மு.க மற்றும் நெமிலி பேரூர் தி.மு.க சார்பில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்களின் 72வது பிறந்த நாளை முன்னிட்டு மாபெரும் பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நெமிலி ஒன்றிய பெருந்தலைவர் பெ. வடிவேலு அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
இதில் சிறப்பு அழைப்பாளராக மாண்புமிகு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி அவர்கள் மற்றும் கழக அமைப்பு செயலாளர் ஆலந்தூர் ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினர்.
இதில் அரக்கோணம் மத்திய ஒன்றிய செயலாளர். பசுபதி, ஒன்றிய பொருளாளர். டில்லிபாபு, இளைஞர் அணி துணை அமைப்பாளர். அருண்குமார் மற்றும் நெமிலி கிழக்கு ஒன்றியம் சயனபுரம் ஊராட்சி மன்ற தலைவர். பவானி வடிவேலு, நகர செயலாளர். ஜனார்த்தனன், அவைத்தலைவர். புருஷோத்தமன், மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர். சரவணன், ஒன்றிய துணை செயலாளர். முகமது அப்துல் ரஹ்மான், மாவட்ட இலக்கிய அணி துணை அமைப்பாளர். வடகண்டிகை பாபு மற்றும் திமுக கழக நிர்வாகிகள் இதில் கலந்து கொண்டனர்.



கருத்துகள்
கருத்துரையிடுக