விழுப்புரம் நகராட்சிக்கு உட்பட்ட பூந்தோட்டம் நகராட்சி தொடக்கப்பள்ளியின் ஆண்டு விழா!


விழுப்புரம் நகராட்சிக்கு உட்பட்ட பூந்தோட்டம் நகராட்சி தொடக்கப் பள்ளியில் ஆண்டு விழ கோலியனூர் வட்டாரக் கல்வி அலுவலர் க.சித்ரா  அவர்கள்  தலைமையிலும் பூந்தோட்டம் நகர மன்ற உறுப்பினர். கோதண்டராமன் அவர்கள் மற்றும் லயன்ஸ் கிளப் தலைவர். கோபு அவர்கள் முன்னிலையிலும் சிறப்பாக நடைபெற்றது. விழாவில் கோலியனூர் வட்டாரக் கல்வி அலுவலர். தேன்மொழி, கோலியனூர் வட்டார வள மைய மேற்பார்வையாளர் மற்றும் ஆசிரியர் பயிற்றுநர்களும் கலந்து கொண்டு அரசினுடைய முன்னெடுப்புகளை விழாவில் எடுத்துக் கூறினர். 


மேலும் பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும் பள்ளியில் உள்ள திறன்மிகு வகுப்பறைகளை பற்றியும் நாடகமாகவும் பாடல் ஆகவும் மாணவர்கள் தெரியப்படுத்தியது சிறப்பாக இருந்தது விழாவின் இறுதியில் விளையாட்டுப் போட்டிகள் மற்றும் இலக்கிய போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. சிறப்பு விருந்தினர்களுக்கு நினைவு பரிசாக புத்தகம் வழங்கப்பட்டது பெற்றோர்களும் பொதுமக்களும் திரளாக கலந்து கொண்டு ஆண்டு விழாவை சிறப்பித்தார்கள்.

விழுப்புரம் மாவட்ட செய்தியாளர் விஜய் 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!