எஸ்.பி வேலுமணியின் இல்ல திருமண விழா மணமக்களை வாழ்த்திய எடப்பாடி கே. பழனிச்சாமி!
கோவை மாவட்டம் கோவை கொடிசியாவில் நடைபெற்ற திருமண வரவேற்பு விழா கழக தலைமை நிலையச் செயலாளரும், கோவை திருப்பூர் நீலகிரி கழக மண்டல பொறுப்பாளரும், கோவை புறநகர் தெற்கு மாவட்ட கழகச் செயலாளருமான. தமிழக எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி அவர்களின் மகன் விஜய்விகாஷ் - தீக்க்ஷனா இணையரின் திருமண வரவேற்பு நிகழ்வில் அதிமுக கழக பொதுச்செயலாளரும், தமிழக முன்னாள் முதல்வருமான எடப்பாடி கே. பழனிச்சாமி அவர்கள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி அவர்களின் இல்ல திருமண விழாவிற்கு சென்று மணமக்கள் விஜய்விகாஷ் - தீக்க்ஷனா அவர்களை வாழ்த்தினார்.
இதில் முன்னாள் அமைச்சரும், உடுமலை சட்டமன்ற உறுப்பினருமான உடுமலை கே.ராதாகிருஷ்ணன், மக்கள் சேவகன் மஜீத், முன்னாள் அமைச்சர்கள், மாவட்ட கழக செயலாளர்கள் மற்றும் அதிமுக கழக நிர்வாகிகள் இதில் கலந்து கொண்டனர்.


கருத்துகள்
கருத்துரையிடுக