கடலூர் - சிறுதானிய விழாவை முன்னிட்டு போட்டிகள்; வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கிய மாவட்ட ஆட்சியர்!


கடலூர் மாவட்டம் 2023-ஆம் ஆண்டை சர்வதேச சிறுதானிய ஆண்டாக அறிவித்ததை தொடர்ந்து, ஒவ்வொரு ஆண்டும் சிறுதானிய ஆண்டு விழா கொண்டாடப்பட்டு வருகிறது. கடலூர் மாவட்டத்தில், பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி, காட்டுமன்னார்கோயில், குமராட்சி, கீரப்பாளையம், மேல்புவனகிரி, பரங்கிப்பேட்டை, விருத்தாசலம், கம்மாபுரம், நல்லூர், மங்களூர், ஸ்ரீமுஷ்ணம் ஆகிய வட்டாரங்களில் உள்ள சத்துணவு பணியாளர்களுக்கு மாவட்ட அளவிலான சிறுதானிய சமையல் போட்டி கடந்த 13-ஆம் தேதி நடத்தப்பட்டது.இது மட்டுமின்றி மாவட்ட முதன்மை கல்வி அலுவலக வளாகத்தில் சிறுதானியம் குறித்த விழிப்புணர்வு வினாடி வினா போட்டியும் நடைபெற்றது. இதில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் 39 பேர் கலந்து கொண்டனர்.இந்தப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு கடலூர் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் பரிசுகளை வழங்கி பாராட்டினார். மேலும், சிறுதானிய கண்காட்சியையும் அவர் பார்வையிட்டார்.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன் 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!