ராஜபாளையம் இளந்திரைகொண்டான் ஊராட்சி அம்மையப்புரம் கிராமத்தில் 28 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்க பூமி பூஜை தங்கப்பாண்டியன் எம்எல்ஏ பங்கேற்பு!


விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் ஊராட்சி ஒன்றியம் இளந்திரைகொண்டான் ஊராட்சி அம்மையப்புரம் கிராமத்தில் 28 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்க MLA S.தங்கப்பாண்டியன் அவர்கள் தலைமையில் பூமி பூஜை சிறப்பாக நடைபெற்றது. 

இந்நிகழ்வில் ஒப்பந்ததாரர்களை அழைத்து தரமாகவும் விரைவிலும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைத்து தர வேண்டுமென கேட்டுக்கொண்டார், அதனைத்தொடர்ந்து அம்மையப்பபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு MLA அவர்கள் நேரில் சென்று குழந்தைகளுடன் உரையாடினார், மேலும் 

பள்ளி சார்பாக பள்ளிக்கு வரும் பாதையில் சிறுபாலத்துடன் பேவர் பிளாக் தளம் அமைத்து தர வேண்டுமென கோரிக்கை வைத்தனர் உடனடியாக வட்டார வளர்ச்சி அலுவலர் அவர்களை MLA அவர்கள் அழைத்து விரைவில் மதிப்பீடு தயார் செய்து பணியை தொடங்க நடவடிக்கை மேற்கொண்டார். 

இந்நிகழ்வில் ஊரக வட்டார வளர்ச்சி அலுவலர் வசந்தகுமார் கிளர்க் சீனிவாசன் மாவட்ட மீனவரணி அமைப்பாளர் நவமணி ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் மாரிமுத்து ஒன்றிய துணை செயலாளர் மலர்மன்னன் கிளைச்செயலாளர் முருகன்  ஒப்பந்ததாரர் அக்ரோ ராமச்சந்திரன் கழக நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!