பூதங்குடி எஸ்.டி சீயோன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பள்ளி ஆண்டு விழா.
புவனகிரி -பூதங்குடி எஸ்.டி சீயோன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பள்ளி ஆண்டு விழா.
பூதங்குடி எஸ். டி. சீயோன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பள்ளியின் 37வது ஆண்டு விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. விழாவிற்கு பள்ளியின் தாளாளர் டாக்டர் சாமுவேல் சுஜின் நிர்வாக இயக்குனர் டாக்டர் தீபா சுஜின் (குழந்தைகள் நல மருத்துவர்) ஆகியோரும் பள்ளியின் நிறுவனர். திரு. சாமுவேல் சாமுவேல் சுகிர்த சந்திரா திருமதி. சேண்டி தேவபெல் ஆகியோரும் தலைமை தாங்கினார்கள். விழாவிற்கு சிறப்பு விருந்தினர்களாக விஜய் டிவி புகழ் திரு ஈரோடு மகேஷ் அவர்களும் புவனகிரி சட்டமன்ற உறுப்பினரும்
அ. இ. அ. தி.மு க மேற்கு மாவட்ட செயலாளருமான திரு. அருண்மொழி தேவன் அவர்களும் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர். சிறப்பு விருந்தினரான திரு ஈரோடு மகேஷ் அவர்கள் 10 11 12 ஆம் வகுப்பு பொது தேர்வு எழுதி இருக்கும் மாணவர்கள் எவ்வாறு பொது தேர்வு எதிர்கொள்ள வேண்டும் என்றும் மாணவர்களை தற்போதைய சூழ்நிலையில் பெற்றோர்கள் எவ்வாறு வழிநடத்த வேண்டும் என்றும் பெற்றோர் மத்தியிலும் ஆசிரியர் மத்தியிலும் முன்வைத்தார். விழாவில் மாணவர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட பல்வேறு வகை கலை நிகழ்ச்சிகளும் கண் கவர் நாடகங்களும் சிலம்பம், கராத்தே, யோகா, போன்றவற்றில் மாணவர்களின் அசாத்திய திறமைகளும் மேடையில் அரங்கேற்றம் செய்யப்பட்டது.
விழாவிற்கு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பார்வையாளர்களும் பல்வேறு அரசியல் கட்சிகள் தலைவர்களும் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர். விழாவிற்கு பள்ளியின் தலைமையாசிரியர் திரு. ஆண்டனி ராஜ் அவர்கள் முன்னிலை வகித்தார்.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்

கருத்துகள்
கருத்துரையிடுக