அரக்கோணம் NDRF 04 வது படை பிரிவில் உலக இரத்த தான தினத்தையொட்டி நடைபெற்ற இரத்த தான முகாம்!!

ராணிப்பேட்டை மாவட்டம்,உலக இரத்த தான தினத்தையொட்டி,  அரக்கோணம் அருகே நகரிக்குப்பத்தில் அமைந்துள்ள தேசிய பேரிடர் மீட்புப் படை (NDRF) 4வது பட்டாலியன் வளாகத்தில் இன்று இரத்த தான முகாம் நடைபெற்றது.

இம்முகாமை NDRF 4வது படை பிரிவின் சீனியர் கமாண்டர்.  அகிலேஷ் குமார் அவர்கள் தொடங்கி வைத்தார். அரக்கோணம் அரசு மருத்துவமனையின் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர். மேகலா, அரசு மருத்துவர் டாக்டர். மணிமாறன் மற்றும் மருத்துவக் குழுவினர் கலந்து கொண்டு இரத்த சேகரிப்பு பணிகளை மேற்கொண்டனர்.

நிகழ்ச்சியில் NDRF மருத்துவ அதிகாரிகள்  Dr. அர்ஜுன் மற்றும் Dr கோவிந்த்  ஆகியோர்கள்  இரத்த தானத்தின் அவசியம், அதன் சமூகப் பயன்கள் மற்றும் உயிர்களைக் காப்பதில் அதன் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைத்தனர்.

சமூக நலன் மற்றும் மனிதநேய சேவையின் ஒரு பகுதியாக நடைபெற்ற இந்த முகாமில் NDRF வீரர்கள், மற்றும் அதிகாரிகளின் குடும்பத்தினர் ஆர்வமுடன் பங்கேற்று இரத்த தானம் வழங்கினர். முகாமில் 57-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு இரத்த தானம் செய்தனர்.

மக்கள் தொடர்பு அலுவலர் (PRO)

NDRF 4வது பட்டாலியன், அரக்கோணம்.

ராணிப்பேட்டை மாவட்ட சிறப்பு செய்தியாளர் ஆர். ஜே. சுரேஷ் குமார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!