குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!
வேலூர் மாவட்டம், குடியாத்தம் அடுத்த எர்த்தாங்கள் பகுதியில் நேற்று கெங்கை அம்மன் சிரசு திருவிழா நடைபெற்றது இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
அப்போது அம்மனுக்கு மாலை அணிவிப்பதில் இரு கோஷ்டிகளிலேயே இடையே தகராறு ஏற்பட்டுள்ளது இதனையடுத்து இன்று காலை ஒரு தரப்பினர் மற்றொரு தரப்பினரை தாக்கியதாக கூறப்படும் நிலையில் இதில் சிலர் காயமடைந்து குடியாத்தம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில்
காயம் அடைந்தவர்களின் உறவினர்கள் தாக்கியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் உடனடியாக கைது செய்ய வேண்டும் எனக் கூறி குடியாத்தம்- பேரணாம்பட்டு சாலையில் சாலை மறியல் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்ற குடியாத்தம் தாலுகா போலீசார் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததன் பேரில் சாலை மறியல் கைவிடப்பட்டது இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் காணப்பட்டது.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்.

கருத்துகள்
கருத்துரையிடுக