அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!
ராணிப்பேட்டை மாவட்டம்,அரக்கோணம் சட்டமன்ற உறுப்பினர் .சு.ரவி MLA தொகுதி மக்களுக்கான கோரிக்கை மனுவை அ.தி.மு.க மாநிலங்களவை உறுப்பினர். ம.தனபால் மத்திய ரயில்வே அமைச்சர். ஸ்ரீ. அஷ்வினி வைஷ்ணவ்வை நேரில் சந்தித்து, கொடுத்தார்.அதில் கேட்டு கொண்டது..
அரக்கோணம் சந்திப்பு இரயில் நிலையத்தில் நிற்காமல் செல்லும் முக்கிய இரயில் வண்டிகளை நிற்க்க வைக்க வேண்டும் மின்சார ரயில் சோளிங்கர் வரை நீட்டிக்க வேண்டும், அரக்கோணம் இரயில்வே மருத்துவமனையில் டயாலிஸ் பிரிவு அமைத்திட வேண்டியும் இச்சிபுத்தூர் இரயில் நிலையத்தை மேம்படுத்த வேண்டுமெனவும், கூடுதலாக நடைமேடை அமைக்க வேண்டும் அரக்கோணம் பழனிப்பேட்டையில் உள்ள இரட்டை கண் சுரங்க பாதையை அகல படுத்த வேண்டும் அல்லது உயர்ந்தபட வேண்டும்., அப்படி இல்லையென்றால் இரயில்வே மேம்பாலம் அமைத்து தர வேண்டும் எனவும் மோசூர் அருகே இரயில்வே சுரங்கப் பாதை அமைத்திட வேண்டியும் கொரோனா கால கட்டத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட இரயில் வண்டிகளை இயக்க கோரியும் மத்திய இரயில்வே அமைச்சரிடம் கொடுத்த மனுவில் இவ்வாறு கூறப்பட்டிருந்தது.
அரக்கோணம் செய்தியாளர் ரவி.

கருத்துகள்
கருத்துரையிடுக