குடியாத்தத்தில் நடைபெற்ற புதிய அங்கன்வாடி மையம் திறப்பு விழா!!
வேலூர் மாவட்டம், குடியாத்தம் ..வளத்தூர். கிராமத்தில் ஆதிதிராவிடர் துவக்கப்பள்ளி வளாகத்தில் சுமார் 16 லட்சத்தி 55.000. மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய அங்கன்வாடி மையம் இன்று திறப்பு விழா நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு அங்கன்வாடி பணியாளர். சுமித்ரா தலைமை தாங்கினார்.
வார்டு உறுப்பினர்கள். மாலதி, தங்கம், எழிலரசி, வெங்கடேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்நிகழ்ச்சியில் அங்கன்வாடி . மேற்பார்வையாளர். கமலா அவர்கள் ரிப்பன் வெட்டி அங்கன்வாடி மையத்தை திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் கலாவதி, உஷாராணி, வசுமதி, ரமா மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.
இறுதியாக அங்கன்வாடி உதவியாளர். வசந்த பிரியா நன்றி கூறினார்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்.


கருத்துகள்
கருத்துரையிடுக