நிலவன் டிவியின் இன்றைய தலைப்புச் செய்திகள்!!

"ஒரு புதிய அரசியலை, அடிப்படை கட்டமைப்பை மாற்றக் கூடிய அரசியலை உருவாக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு பாஜகவில் இருந்து ராஜினாமா செய்தேன்"

-அண்ணாமலை.

🔹முதலமைச்சர் விஜய் தலைமையில், இன்று தவெக அரசின் முதல் அமைச்சரவை கூட்டம். பட்ஜெட், டாஸ்மாக் மறுசீரமைப்பு உள்ளிட்ட விஷயங்கள் குறித்து விவாதிக்க வாய்ப்பு.

🔹மக்கள் வருந்தும் அளவுக்கு தவெகவின் ஆட்சி நடப்பதாக உதயநிதி விமர்சனம். தமிழ்நாட்டை சோஃபா மாடலாக மாற்றியதே தவெகவின் சாதனை என்றும் காட்டம்.

🔹டெல்லியில் நடைபெறும் இந்தியா கூட்டணி கூட்டத்தில் திமுக பங்கேற்காது என அறிவிப்பு. காங்கிரசின் துரோகத்தால் மனக்காயமுற்ற தொண்டர்களுக்கு மதிப்பளித்து முடிவு.

🔹மாநிலங்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் இருந்து காங்கிரஸின் பிரவீண் சக்கரவர்த்தி வேட்பாளராக அறிவிப்பு. கர்நாடகாவில் இருந்து கார்கே உள்ளிட்ட 3 பேர் போட்டி.

🔹டெல்லியில் பிரதமர் மோடியுடன் வெனிசுலா தற்காலிக அதிபர் டெல்சி சந்திப்பு. இருநாடுகளுக்கும் இடையே பல துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து பேசியதாக தகவல்.

🔹முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்திற்கான ஒப்பந்தம் மேலும் 3 மாதம் நீட்டிப்பு. 3 மாதங்களில் டெண்டர் கோரப்பட்டு புதிய ஒப்பந்தாரர்களை தேர்வு செய்ய திட்டம்.

🔹தமிழ்நாடு மின்வாரிய தலைமை அலுவலகத்தில் 18 ஹார்டு டிஸ்குகள் திருட்டு தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

🔹கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானை பதவி விலகக்கோரும் போராட்டம் டெல்லியில் நாளை நடைபெறுமா? நாடு திரும்பும் கரப்பான் பூச்சி ஜனதா கட்சி நிறுவனரை கைது செய்ய ஒன்றிய அரசு திட்டம். 

🔹இஸ்ரேல் - லெபனான் தற்காலிக போர் நிறுத்தத்தை ஏற்க முடியாது என்றும் இஸ்ரேலிய படைகள் முழுமையாக வெளியேற வேண்டுமென ஹிஸ்புல்லா அமைப்பு நிபந்தனை.

🔹20 ஓவர் கிரிக்கெட் அணியின் கேப்டனாக ஸ்ரேயாஸ் ஐயரை நியமிக்க திட்டம். சூர்யகுமார் யாதவை நீக்க பிசிசிஐ முடிவு என தகவல்.

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!