கோடை விடுமுறை முடிந்து இன்று மீண்டும் பள்ளிகள் திறக்கப்படுகின்றன!!
தேனி மாவட்டம், ஆண்டிபட்டி வட்டாரம் தி.சுப்புலாபுரம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் மதிப்புமிகு தேனி மாவட்டத் தொடக்கக்கல்வி அலுவலர் திருமதி நாகலட்சுமி அவர்களின் தலைமையிலும் வட்டாரக்கல்வி அலுவலர் மதிப்புமிகு திரு.வீராச்சாமி அவர்களின் முன்னிலையிலும் முதல் வகுப்பில் சேர்ந்துள்ள மாணவர்கள் 42 பேரும் அவர்களது பெற்றோர்களும் டிரம்ஸ் இசைத்து ஊர்வலமாக பள்ளிக்கு அழைத்து வரப்பட்டு, சந்தனம் குங்குமம் வழங்கி குளிர்பானத்தோடு ரோஜா மலரும் சாக்லேட்டும் கொடுத்து வரவேற்பு செய்யப்பட்டனர், பெற்றோர்களுக்கு பொன்னாடையும் போர்த்தப்பட்டது,
அனைத்து மாணவர்களுக்கும் அரசின் விலையில்லா பொருட்கள் வழங்கும் நிகழ்வும் நடைபெற்றது, முன்னதாக பள்ளியின் தேசியக்கொடியை ஏற்றிவைத்து பள்ளியின் எதிர்கால வளர்ச்சியினைப் பற்றி மாவட்டத்தொடக்கக் கல்வி அலுவலர் திருமதி நாகலட்சுமி அவர்களும், ஆசிரியர் செயல்பாடுகள் குறித்து வட்டாரக்கல்வி அலுவலர் திரு.வீராச்சாமி அவர்களும் மாணவர் முன்னேற்றம் குறித்து தலைமை ஆசிரியர் திரு.ஜெ.இராஜாராம் பாண்டியன் அவர்களும் பேசினர், அதன்பிறகு பெற்றோர் ஆசிரியர் சந்திப்புக் கூட்டம் நடத்தப்பட்டு விழா இனிதே நிறைவுற்றது. இச் சிறப்பான விழாவிற்கான ஏற்பாடுகளை தலைமை ஆசிரியர் திரு.ஜெ.இராஜாராம் பாண்டியன் மற்றும் அனைத்து ஆசிரியப் பெருமக்களும் சேர்ந்து மிகச் சிறப்பாகச் செய்திருந்தனர். தி. சுப்புலாபுரத்தில் முதல் வகுப்பு மாணவர்கள் சேர்க்கையானது திருவிழா போல் நடைபெற்றது.
தேனி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தனலட்சுமி



கருத்துகள்
கருத்துரையிடுக