காவேரிப்பாக்கம் அருகே காலையில் பள்ளிக்கு அழைத்துச் செல்லும் வழியில் ஏற்பட்ட சாலை விபத்தில் தாத்தா பேரன் பேத்தி ஆகிய மூவர் உயிரிழந்த சோகம்!!
ராணிப்பேட்டை மாவட்டம், காவேரிப்பாக்கம் அருகே இருசக்கர வாகனம், எதிரே வந்த பொலிரோ லோடு ஆட்டோவின் மீது மோதி விபத்துக்குள்ளானதில் தாத்தா, பேரன், பேத்தி ஆகிய மூவர் உயிரிழந்ததோடு மற்றொரு சிறுவன் பலத்த காயங்களுடன் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. காவேரிப்பாக்கம் அடுத்த ஓச்சேரி பகுதியை சேர்ந்தவர் வேலு(59). இவர் தனது பேரன் அஸ்வந்த், பேத்தி அனுஸ்ரீ மற்றும் பக்கத்து பகுதியை சேர்ந்த சிறுவன் என மூன்று பேரை அழைத்துக் கொண்டு சென்றுள்ளார். சரியாக காவேரிப்பாக்கம் அடுத்த முருகன் இட்லி கடை எதிரே சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் நுழைந்தபோது எதிர்பாராத விதமாக எதிரே வந்த பொலிரோ லோடு ஆட்டோ மோதி விபத்துக்குள்ளானது இந்த விபத்தில் இரு சக்கர வாகனத்தில் பயணித்த தாத்தா வேலு(59), பேரன் அஸ்வந்த், பேத்தி அனுஸ்ரீ ஆகிய மூவர் உயிரிழப்பு. பலத்த காயங்களுடன் மற்றொரு சிறுவனான அஜய் சிகிச்சைக்காக வாலாஜாபேட்டை அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்படுள்ள நிலையில், காவேரிப்பாக்கம் போலீசார் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மாவட்ட சிறப்பு செய்தியாளர் ஆர்ஜே. சுரேஷ்குமார்.

கருத்துகள்
கருத்துரையிடுக