கலவை அருகே வீடு வீடாக சேகரிக்கும் குப்பை கழிவுகளை தீ வைத்து எரிக்கும் அவல நிலை!!


ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு தாலுக்கா கலவை பேரூராட்சியில் 15 வார்டுகளில் பொதுமக்களிடமிருந்து வீடு வீடாக சென்று தூய்மை பணியாளர்கள் மற்றும் குப்பை மக்காத குப்பை என தரம் பிரித்து வாழைப்பந்தல் சாலையில் உள்ள திடக்கழிவு மேலாண்மை கிடங்கில் தரம் பிரித்து உரம் தயாரிக்க வேண்டும் எனக் கூறப்பட்டு அரக்கோணம் பகுதியைச் சேர்ந்த தனியார் ஒப்பந்ததாரர் மூலம்  ஒப்பந்த அடிப்படையில் மக்கும் குப்பை மக்காத குப்பைகளை தூய்மை பணியாளர்கள் வீடு வீடாகச் சென்று சேகரித்து திடக்கழிவு மேலாண்மை கிடங்கு பின்புறம் உள்ள கலவை புத்தூர் சாலையில் குப்பைகளை கொட்டி வீட்டிற்கு செல்லும் நேரத்தில் தீ வைத்து எரித்துவிட்டு செல்கின்றனர். மாலை நேரத்தில் தீ  மலமல என பரவி அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளிக்கிறது. அவ்வையாகச் செல்ல 500க்கும் மேற்பட்ட வாகனங்கள் செல்லும் வாகன ஓட்டிகள் மூச்சு திணறல் ஏற்பட்டு பெரும் சிரமம் அடைகின்றனர். இது தொடர்ந்து தீ வைத்து எரிப்பதால் பேரூராட்சி செயல் அலுவலர் ஜெயக்குமாரிடம், பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் பலமுறை கூறினர் இது குறித்து எவ்வித நடவடிக்கை எடுக்காமல் இருப்பதால் புகை மண்டலமாக காட்சியளிக்கிறது எனவே மாவட்ட நிர்வாகம் குப்பை கழிவுகளை தீயிட்டு கொளுத்தும் ஒப்பந்ததாரர் மீதும் நடவடிக்கை எடுக்காத அதிகாரி மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதியில் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 ஒருங்கிணைந்த மாவட்ட சிறப்பு செய்தியாளர் ஆர்ஜே. சுரேஷ்குமார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!