கோவையில், ஆட்டிசம் பாதிக்கப்பட்ட குழந்தைகள் பயிற்சி பெற்று வரும் நிலையில், அவர்களது வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டு வேலைவாய்ப்பை ஏற்படுத்தித் தர தமிழக அரசு முன்வர வேண்டும் என்று நித்தில்யம் அறக்கட்டளையினர் கோரிக்கை !!

கோவை மாவட்டம், அன்னூரில் உள்ள நித்தில்யம் சிறப்புப் பள்ளியில் படிக்கும் ஆட்டிசம் பாதித்த மாணவர்களின் திருக்குறள் கூறும் “குறளோசை” நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட நடிகர் சிவக்குமார் குழந்தைகள் மத்தியில் திருக்குறளை கொண்டு சேர்க்க வேண்டியதன் அவசியம் குறித்து பேசினார்.

இதனைத் தொடர்ந்து சிவக்குமார் கேட்ட கணித விடுகதை ஒன்றிற்கு தமிழ் ஆசிரியர் ஒருவர் சரியான விடை அளித்தார்.

இதனைத் தொடர்ந்து அவருக்கு 1000 ரூபாய் சன்மானமாக வழங்கிய சிவக்குமார், இதுவரை இந்த விடுகதைக்கு மூன்று பேர் மட்டுமே சரியான விடை அளித்து தன்னிடம் ஆயிரம் ரூபாய் பரிசு பெற்றதாகத் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற குழந்தைகளுக்கு பரிசுகளை வழங்கினார்.

நிகழ்ச்சி குறித்து பேசிய நித்தில்யம் அறக்கட்டளை தலைவர் காயத்ரி சம்பத், ஆட்டிசம் பாதித்த குழந்தைகள் பள்ளிகளில் பயிற்சி முடித்து வெளியே வரும்போது, அவர்களுக்கு தொழில் நிறுவனங்கள் வேலைவாய்ப்பை வழங்க முன்வர வேண்டும்.

ஆட்டிசம் பாதித்த தனது குழந்தை வளர்ந்த பின் வாழ்வாதாரத்திற்கு என்ன செய்யும் என்பது இன்றைய கால பெற்றோர்களின் கவலையாக உள்ளது. எனவே தமிழக அரசு இந்த குழந்தைகளின் வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டு அவர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்க முன்வர வேண்டும். இது வாழ்க்கை மீது அவர்களுக்கான நம்பிக்கையை அதிகரிக்கச் செய்யும் என்றார்.

இந்த நிகழ்ச்சியில் நித்தில்யம் அறக்கட்டளை நிர்வாகிகள் சம்பத்குமார், அருள் செல்வம், ஈஸ்வர மூர்த்தி, தீபா சுப்ரமணியம், ராஜேந்திரன், யாமினி ஆகியோர் கலந்து கொண்டனர்.

கோவை செய்தியாளர் பட்டுராஜ்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!