கழகத் தியாகிக்கு வீரவணக்க அஞ்சலி!!

 

ராமநாதபுரம் மாவட்டம், அதிமுக கழக ஒற்றுமைக்காகத் தனது இன்னுயிரைத் தியாகம் செய்த, தஞ்சை கிழக்கு மாவட்ட வர்த்தக அணி இணைச்செயலாளர் . பூக்கடை K.S. மகேந்திரன் அவர்களின் மறைவிற்கு, அஇஅதிமுக சார்பில் வீரவணக்கம் செலுத்தப்பட்டது.

இராமநாதபுரம் மாவட்ட அஇஅதிமுக சார்பில், மாவட்ட கழக செயலாளர். MA. முனியசாமி அவர்கள் தலைமையில் இன்று எழுச்சியுடன் நடைபெற்ற இந்நிகழ்வில், திரளான கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்துகொண்டு தியாகச் செம்மல் பூக்கடை மகேந்திரன் அவர்களுக்குத் தங்களது கண்ணீர் அஞ்சலியைச் செலுத்தினர்.

​கழகக் காப்போம்... தியாகம் மறவோம்!

கழகத்தின் ஒற்றுமைக்காகத் தன் மூச்சை நிறுத்திக்கொண்ட தியாகச் செம்மலின் புகழ் என்றும் நிலைத்து வாழும்.-அதிமுக.

தென்மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!