சோளிங்கர் அருகே தனியார் பள்ளி வாகனத்தில் சிக்கி இரண்டு வயது குழந்தை பலி! போலீஸ் குவிப்பு !!
ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் கொடைக்கல் பஞ்சாயத்துக்கு உட்பட்ட அடுத்த புது குடியனூர் கிராமம் உள்ளது.
இந்த கிராமத்தில் வசிப்பவர் கதிர்வேல் வயது 40 இவருடைய மனைவி மோனிஷா வயது 35 இவர்கள் கூலி வேலை செய்து வருகிறார்கள்.
இவருக்கு ஐந்து வயது பொற்கொடி என்ற பெண் குழந்தை இரண்டு வயது ஏமநாத் என்ற ஆண் குழந்தையும் உள்ளனர்.
பொற்கொடி பெண் குழந்தை சோளிங்கர் அருகே தனியார் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்து வருகிறார்.
பொற்கொடி படிக்கும் பள்ளி வாகனத்தில் நாள்தோறும் சென்று வருகின்றார்.
இந்த நிலையில் மாலை 4 மணி அளவில் பொற்கொடி தன் பள்ளி வாகனத்தில் புது குடியனூர் கிராமத்தில் உள்ள தன் வீட்டினருக்கு பள்ளி வாகனத்தில் குழந்தைகளோடு வந்துள்ளார்.
பொற்கொடி தாயார் மோனிஷா பள்ளி பேருந்தில் வரும் தன் குழந்தை பொற்கொடியை அழைப்பதற்காக தன் வீட்டின் அருகே வந்து நின்ற பள்ளிப் பேருந்து அருகே சென்றுள்ளார்.
உடன் தன் மகன் ஹேமனார்த்தும் வந்துள்ளார்.
மோனிஷா பள்ளிப் பேருந்தில் இருந்து தன் மகளான பொற்கொடியை வண்டியிலிருந்து இறக்கும் பொழுது ஹேமநாத் திடீரென்று பள்ளி வாகனத்தின் முன் சென்று உள்ளார் இதை தாய் மோனிஷாவும் கவனிக்கவில்லை ஓட்டுனரும் கவனிக்கவில்லை
மோனிஷா தன் குழந்தை பொற் கொடியை பள்ளி வாகனத்தில் இருந்து இறக்கியபின் குழந்தையை தேட ஆரம்பித்துள்ளார்.
குழந்தை காணாத நிலையில் மோனிஷா சத்தம் போட்டு உள்ளார்.
பள்ளி வாகன ஓட்டுனரும் இரண்டு வயது குழந்தை என்பதால் வண்டியில் இருந்து பார்க்கும் பொழுது குழந்தை தெரியவில்லை எதனால் ஓட்டுனர் பள்ளி வாகனத்தை இயக்கியுள்ளார்.
ஹேமநாத் முன் பக்கம் சக்கரத்தின் கீழே நின்று கொண்டிருந்த பொழுது பள்ளி வாகனம் இயக்கும்போது ஹேமநாத்தின் தலையின் மீது ஏறி இறங்கியது இதனால் அதே இடத்தில் குழந்தை ஏமாற்றத்தின் ஊழல்கள் சிறந்தது இதை கண்ட தாயாரும் கூச்சலிட ஓட்டுனர் இறங்கி தப்பித்து சென்றுள்ளார்.
அக்கம் பக்கத்தில் இருந்த பொதுமக்கள் விரைந்து வந்து சக்கரத்தில் சிக்கி உள்ள குழந்தையை உடலை எடுத்து சோளிங்கர் கொண்டபாளையம் காவல் துறைக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
மேலும் குழந்தையின் உறவினர்கள் தாய் தகப்பன் பள்ளி நிர்வாகம் தன் கிராமத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினால் மட்டுமே குழந்தையின் உடலை பிரேத பரிசோதனைக்காக கொடுப்போம் என ஊர் மக்கள் போராட்டம் நடத்த முயற்சித்தனர்.
தகவல் அறிந்த போலீசார் அங்கு போலீஸ் குவிக்கப்பட்டு
மேலும் போலீசார் உறவினிடையே பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
நீண்ட நேரம் பேச்சு வார்த்தைக்கு பின்பு குழந்தையின் உடலை பிரேத பரிசோதனைக்காக போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
இறந்த குழந்தையை சோளிங்கர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டு வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சோளிங்கர் செய்தியாளர் ஞானமூர்த்தி.

கருத்துகள்
கருத்துரையிடுக