பண்ருட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு!!
கடலூர் மாவட்டம்,தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித்துறை வழிகாட்டுதல்படி ஆண்டுதோறும் ஜூன் 12 குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு நாள் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இந்நிகழ்ச்சியை பண்ருட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பள்ளி தலைமை ஆசிரியர். சு.திருமாவளவன் அவர்கள் தலைமையில் உதவித்திறமை ஆசிரியர்கள்.பாபு, பி.ஹேமலதா ஆகியோர் முன்னிலையில்இந்நிகழ்ச்சி நடைபெற்றது.
.பள்ளி தேசிய மாணவர் படை அலுவலர் முனைவர் ராஜா, குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு நாள் உறுதி மொழியை வாசிக்க ஆசிரியர்களும், 1500 க்கும் மேற்பட்ட மாணவர்களும் குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு நாள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
வடக்கு மண்டல செய்தியாளர் குமார்.


கருத்துகள்
கருத்துரையிடுக