திரைப்பட இயக்குநரும், நடிகருமான பாரதிராஜா அவர்கள் காலமானார்!!
மண்ணின் மணத்தை திரைக்கு கொண்டு வந்த மனிதர்...கிராமங்களின் கதையை உலகம் அறியச் செய்த கலைஞர்...தமிழ் சினிமாவுக்கு புதிய மொழியை கற்றுக் கொடுத்த படைப்பாளர்...இயக்குநர் இமயம் Bharathiraja அவர்களின் மறைவு செய்தி மனதை கனக்கச் செய்கிறது.வயல்களின் வாசனையையும், மனித உறவுகளின் உணர்வுகளையும், எளிய மக்களின் வாழ்க்கையையும் திரைப்படங்களின் வழியே உயிர்ப்பித்து காட்டியவர் அவர்.
ஒரு இயக்குநராக மட்டுமல்ல... ஒரு தலைமுறையின் நினைவாகவும், ஒரு மண்ணின் அடையாளமாகவும், ஒரு கலைப் பள்ளியாகவும் வாழ்ந்தவர்.அவர் உருவாக்கிய கதாபாத்திரங்களும், அவர் கண்டுபிடித்த கலைஞர்களும், அவர் விட்டுச் சென்ற படைப்புகளும் காலம் கடந்தும் பேசிக்கொண்டே இருக்கும்."மனிதர்கள் மறையலாம்... ஆனால் அவர்கள் விதைத்த கலாச்சாரமும் கலை மரபும் மறைவதில்லை." இயக்குநர் இமயம் பாரதிராஜா அவர்களுக்கு கதம்பத்தின் ஆழ்ந்த இரங்கல்கள். 🌹அன்னாரின் ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறோம். 🕯️
தலைமை செய்தியாளர் சின்னத்தம்பி

கருத்துகள்
கருத்துரையிடுக