கோவையில் ரத்தினபுரி அருள்மிகு ஸ்ரீ ஜலக்கண் மாரியம்மன் திருக்கோவிலில் நடைபெற்ற அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக பெருவிழா!!
கோவை ரத்தினபுரி அருள்மிகு ஸ்ரீ ஜலக்கண் மாரியம்மன் திருக்கோவில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக பெருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் சுற்றுப்பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசம் செய்தனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
கோவை ரத்தினபுரி இரண்டாவது கிராஸ் சம்பத் வீதி பகுதியில் அமைந்துள்ளது அருள்மிகு ஸ்ரீ ஜலக்கண் மாரியம்மன் திருக்கோவில். இக்கோவில் தற்போது புனரமைக்கப்பட்டு மகா கும்பாபிஷேக நன்னீராட்டு பெருவிழா நான்கு கால யாக பூஜையுடன் விமர்சையாக நடைபெற்றது.
கடந்த வெள்ளிக்கிழமை மங்கல இசையுடன் தொடங்கிய இந்நிகழ்வில் விநாயகர் வழிபாடு, மகா கணபதி ஹோமம், அஷ்டலட்சுமி ஹோமம், மகா சுதர்சன ஹோமம், நவகிரக சாந்தி ஹோமம் உள்ளிட்ட ஹோமங்களுடன் முதல் கால வேள்வி பூஜைகள் நிறைவடைந்தன. தொடர்ந்து முளைப்பாரிகை மேளதாளத்துடன் திருவீதி உலா வந்து ஆலயத்தில் சேர்ந்தன.
சனிக்கிழமை விமான கலசம் பிரதிஷ்டை செய்து யாக குண்டத்தில் ஹோம பொருட்கள் இட்டு இரண்டாம் கால வேள்வி பூஜை நடைபெற்றது. மாலை சிறப்பு வள்ளி கும்மி அடித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதையடுத்து இன்று மூன்றாம் கால வேள்வி யாகம் மற்றும் நான்காம் கால வேள்வி யாகம் நிறைவு பெற்று நலம் தரும் ஜலக்கண் அம்பிகைக்கு விமான கும்பாபிஷேகம் ஸ்ரீ அம்மன் பரிவார சன்னதி மும்மூர்த்திகளுக்கு சமகால மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து மகா அபிஷேகம் சிறப்பு அலங்கார தரிசனம் நடைபெற்று பக்தர்களுக்கு கும்பாபிஷேக பிரசாதம் வழங்கினர். இதில் சுற்று வட்டாரங்களில் இருந்து சிலர் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
இந்த கும்பாபிஷேக யாக பூஜைகளை கோவையைச் சேர்ந்த அந்தமான் பூஜை புகழ் ஸ்ரீ உ வே வெங்கடேச அய்யங்கார் குழுவினர் செய்திருந்தனர். கும்பாபிஷேகத்தை கோவைப்புதூர் சித்தர் பீடம் குரு ஸ்ரீ சித்தர் சக்திநாதர் சிவ ஸ்ரீ சிவ ஜோதி சித்தர் நடத்தி வைத்து அருளாசி வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி சம்பத்குமார், ஸ்ரீதேவி டெக்ஸ்டைல்ஸ் உரிமையாளர் சிவா, பி ஜே எம் எம் மாநிலத் துணைத் தலைவர் புவனேஸ்வரன் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
கும்பாபிஷேகத்திற்கான ஏற்பாடுகளை அருள்மிகு ஸ்ரீ ஜலக்கண் மாரியம்மன் திருக்கோவில் அறங்காவலர் குழு கதிரவன், கார்த்திக் பாபு, பாபு ராமசாமி, தலைமை குழு ஸ்ரீராம், ரமணன், கார்த்திக், மணிகண்டன், கிருஷ்ணா, நிர்வாக குழு ஆர்வி கன்சல்டிங் சுரேஷ், அபிஷேக் கன்சல்டிங் தனபால், அஜித் கண்ணன், விழா குழு கோவிந்தராஜ் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.
கோவை செய்தியாளர் பட்டுராஜ்.


கருத்துகள்
கருத்துரையிடுக