பண்ருட்டி அடுத்த வேலன்குப்பம் பாலமுருகன் கோயிலில் நடைபெற்ற மகா கும்பாபிஷேகம்!!

கடலூர் மாவட்டம்,  பண்ருட்டி வட்டம்,  வேலன்குப்பம், புதிய ஏரிக்கரையில் அமைந்துள்ள விநாயகர்,  பாலமுருகன்,  இடும்பன், கடம்பன் சுவாமி ஆலய மகா கும்பாபிஷேகம் இன்று காலை நடைபெற்றது.

முன்னதாக சுவாமிக்கு காலை விநாயகர் பூஜை,  வருண பூஜை, 

 சந்திர பூஜை, சிவசூரியாராதனம், மூலிகை திரவிய ஹோமம், பூர்ணாஹுதி யாத்ராதானம் நடைபெற்று யாகசாலையிருந்து கடம் புறப்பாடாகி விமான கோபுர கலசங்களில் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது.

பின்னர் புனித நீர் பக்தர்களுக்கு தெளிக்கப்பட்டது.

வேலன்குப்பம் கிராம முக்கிய பிரமுகர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

வடக்கு மண்டல செய்தியாளர் குமார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!