ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக்.மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற மேல்நிலை முதலாமாண்டு வகுப்புத் துவக்க நாள் விழா!!
புதுக்கோட்டை திருக்கோகர்ணம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் மேல்நிலை முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வகுப்பு துவக்க நாள் விழா நடைபெற்றது. விழாவிற்கு பள்ளியின் முதல்வர் கவிஞர் தங்கம் மூர்த்தி தலைமையேற்றார். பள்ளியின் ஆலோசகர் அஞ்சலிதேவி தங்கம் மூர்த்தி குத்துவிளக்கேற்றி விழாவினைத் துவக்கி வைத்தார். பள்ளியின் இயக்குனர் ரா.சுதர்சன் முன்னிலை வகித்தார். பள்ளி முதல்வர் கவிஞர் தங்கம் மூர்த்தி பேசும்போது
”நம் பள்ளியில் மாணவர்களுக்கு கல்வியோடு ஒழுக்கத்தையும் கற்றுக்கொடுக்கின்றோம். மதிப்பெண்களோடு மதிப்பான எண்ணங்களையும் வளர்கின்றோம். மாணவர்கள் முடி வளர்ப்பதற்கு பதில் அறிவை வளர்க்க வேண்டும். மாணவர்களின் ஒழுக்கத்தில் கல்வியில் பெற்றோர்கள் கவனம் செலுத்த வேண்டும். மேல்நிலை முதலாமாண்டில் அடியெடுத்து வைக்கும் அனைத்து மாணவர்களுக்கும் வாழ்த்துகள்” என்று குறிப்பிட்டார். பள்ளியின் ஆலோசகர் அஞ்சலிதேவி தங்கம் மூர்த்தி, இயக்குனர் ரா. சுதர்சன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். முன்னதாக பெற்றோர்களுக்கு வழங்கப்பட்ட மாணவர்களுக்கான விதிமுறைகளை தமிழாசிரியர் ராஜாமணி வாசித்தார். அனைத்து மாணவர்களுக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. பள்ளியின் துணைமுதல்வர் குமாரவேல் வரவேற்க நிறைவாக ஆங்கில ஆசிரியர் பிரபாகரன் நன்றி கூறினார். மேல்நிலை முதலாமாண்டு ஆசிரியர்கள், மாணவர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தனர். நிகழ்வினை ஆசிரியை காருண்யா தொகுத்து வழங்கினார். விழாவில் ஏராளமான பெற்றோர்களும், மாணவர்களும் கலந்து கொண்டனர்.
புதுக்கோட்டை மாவட்ட செய்தியாளர் அசோக்.


கருத்துகள்
கருத்துரையிடுக