திருச்செந்தூர் கோவிலில் கைபேசி கொண்டு செல்ல தடை!!
உயர் நீதிமன்ற உத்தரவின்படி, வரும் 1-ஆம் தேதி முதல் திருச்செந்தூர் முருகன் கோயிலுக்குள் பக்தர்கள் செல்போன் பயன்படுத்த விதிக்கப்பட்டுள்ள தடை தீவிரமாக நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.
சோதனையின் போது செல்போன் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டால் அது உடனடியாகப் பறிமுதல் செய்யப்படும்.
இதனால் கோயிலுக்கு வரும் பக்தர்கள் தங்களின் செல்போன்களைத் தாங்கள் தங்கியிருக்கும் அறைகளிலோ அல்லது கோயிலில் உள்ள பாதுகாப்புப் பெட்டகங்களிலோ பாதுகாப்பாக வைத்துவிட்டு வருமாறு கோயில் நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.
தலைமை செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக