கோவை செல்வபுரம் பகுதியில் உள்ள குடிசை மாற்று வாரிய மண்டல அலுவலகமான, தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தில் தொடர்ந்து நடைபெறும் முறைகேடுகள் நடந்து வருகின்றதாக தமிழக முற்போக்கு மக்கள் கட்சி கண்டனம்!!


கோவை சிவாஜி காலனி பகுதியில், தமிழக முற்போக்கு மக்கள் கட்சியின் கோவை மண்டல அலுவலகம் அமைந்துள்ளது. இக்கட்சியின்  மாநில துணைத் தலைவராக வழக்கறிஞர் புஸ்பாணந்தம் இருந்து வருகின்றார். இவர் தமிழக முதல்வருக்கு புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அந்த மனுவில், கோவை மாவட்டத்தில், ஏழை எளிய மக்களுக்கு கடந்த 15 வருடங்களுக்கும் மேலாக இலவச சட்ட ஆலோசனை மற்றும் சமூக சேவை செய்து வருகின்றதாகவும், கோவை செல்வபுரத்தில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் செயல்பட்டு வருகிறது. கோவை மாவட்டத்தில் உள்ள 11 தாலுகாவிற்கும் இதுதான் தலைமை அலுவலகம் ஆகும். கோவையில் பல இடங்களில் இந்த அலுவலகம் மூலம் அடுக்குமாடிக் குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளது. குறிப்பாக கீரணத்தத்தில் மூன்று திட்டப் பகுதிகள் உள்ளது. கோவை செல்வபுரம், கல்லாமேடு, எழில் நகர், தெற்கு பேரூர், வடக்கு பேரூர், உக்கடம் புல்லுக்காடு, வெள்ளலூர், கோவைப்புதூர், குளத்துப்பாளையம், அறிவொளி நகர், மணி நகர், குப்பிச்சிப்பாளையம், பொள்ளாச்சி, வால்பாறை, அன்னூர் இப்படி இன்னும் பல பகுதிகளில் அடுக்குமாடிக் குடியிருப்புகள் கட்டப்பட்டு பயனாளர்களுக்கு வீடு ஒதுக்கீடு செய்துள்ளார்கள். இந்த அலுவலகத்தில் ஒப்பந்ததொழிலாளர்கள் 25 பேர் பணியாற்றி வருகின்ற நிலையில், மூன்று வருடத்திற்கு மேல் இதே இடத்தில் தான் பணி மாற்றம் செய்யாமல் இருந்து வருகிறார்கள். வீடு ஒதுக்கீடு கேட்டு விண்ணப்பம் செய்தால், மனுவை வாங்கிக் கொண்டு ரசீது தர மறுக்கிறார்கள். விண்ணப்பம் வழங்கியவர்கள் அலுவலகத்திற்கு சென்று கேட்டால் சரியாக பதில் சொல்வதில்லை. அதிகாரிகள் இல்லையென்று வேண்டுமென்றே பொய் சொல்லி துரத்தி விடுகிறார்கள். குறிப்பாக இந்த அலுவலகத்தில் அரசியல் தலையீடு மிகவும் உள்ளது. செல்வபுரத்தில் பகுதிச் செயலாளராக இருக்கும் திமுகவை சேர்ந்த நபர் அங்குள்ள அதிகாரியை கைக்குள் போட்டுக் கொண்டு பகுதிச் செயலாளர் சொல்வதை தான் அதிகாரிகள் கேட்டு முறைகேடாக வீட்டை ஒதுக்கீடு செய்கிறார்கள் எனவே, கோவை செல்வபுரத்தில் உள்ள தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தில் தொடர்ந்து முறைகேடுகள் நடந்து வருகிறுது எனவும், அங்கு நடக்கும் ஊழலை கண்டுபிடித்து மூன்று வருடத்திற்கு மேல் பணிபுரியும் ஊழியர்களை உடனடியாக பணிமாற்றம் செய்து ஊழலை தடுக்கும் படியும் பொதுமக்கள் சார்பாகவும், எனது கட்சியின் சார்பாகவும் தங்களைத் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன் என்று மனு அளித்துள்ளார்.

கோவை செய்தியாளர் பட்டுராஜ்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!