நத்தம் அருகே மணக்காட்டூரில் முத்தாலம்மன் சுவாமி உற்சவ விழா பந்தய கழுகுமரம் ஏறுதல் நிகழ்ச்சி!!


திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே குடகிப்பட்டி ஊராட்சியில் மணக்காட்டூரில் உள்ள முத்தாலம்மன் கோயில் உற்சவ திருவிழா நடந்தது . இதையொட்டி கடந்த மே மாதம் 20 ந் தேதி இரவு 7 மணி கிராம தேவதைகளுக்கு கனி வைத்தல் நிகழ்ச்சியை தொடர்ந்து அம்மனுக்கு பிடிமண் கொடுத்தல் நிகழ்ச்சியும் பின்னர் இரவு 9 மணிக்கு முத்தாலம்மன் சுவாமிக்கு காப்பு கட்டுதல் தொடர்ந்து பக்தர்கள் காப்பு கட்டி விரதம் தொடங்கினர். கடந்த 3 ந்தேதி (3-6-2026)  மாலை கிராம தேவதைகளுக்கு கனிவைத்தல் நிகழ்ச்சியைத் தொடர்ந்து இரவு தோரணம் கட்டுதல் நிகழ்ச்சியும் தொடர்ந்து இன்னிசைக் கச்சேரி, தேவராட்டம், கரகாட்டம், ராஜா ராணி ஆட்டம் உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகள் நடந்தது . தொடர்ந்து இரவு 12 மணிக்கு முத்தாலம்மன் சுவாமி எழுந்தருளி மேளதாளம், முழங்க வாண வேடிக்கை, அதிர்வேட்டுகளுடன் 

மின் அலங்கார ரதத்தில் அம்மன் நகர் வலம் வந்தது. நேற்று காலை 6 மணிக்கு அம்மன் குடிபுகுதல் நிகழ்ச்சியை தொடர்ந்து பக்தர்கள் முளைப்பாரி, மாவிளக்கு, பால்குடம், பூத்தட்டு,  அக்னிச் சட்டி எடுத்தல் போன்ற நேர்த்திக் கடன்களை செலுத்தினர். காலை 9 மணிக்கு படுகளம் போடுதல்,குட்டி கழுகு மரம் ஏறுதல்போன்ற நிகழ்ச்சியும் தொடர்ந்து மதியம்  பந்தயக்கழுகுமரம் ஏறுதல் நிகழ்ச்சி நடந்தது. இதில் மணக்காட்டூர், தேத்தாம்பட்டி உள்ளிட்ட சுற்று வட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த கழுகுமரம் ஏறும் நிகழ்ச்சி நடந்தது. இதில் சுமார் 95 நீளமுள்ள கமுகுமரத்தின் உச்சியில் அடையாளம் வைக்கப்பட்டது கழுகு மரம் ஏறும் வீரர்கள் போட்டி போட்டு ஏறி உச்சியில் உள்ள அடையாளத்தை தொட்டனர். தொட்ட நபருக்கு  கிராமத்தின் சார்பாக பரிசு வழங்கப்பட்டது . தொடர்ந்து பொங்கல் வைத்து கிடா வெட்டுதல் நிகழ்ச்சியை தொடர்ந்து மாலை 5 மணிக்கு மேளதாளம் முழங்க, அதிர்வேட்டு, வர்ணக்குடை, தீவட்டி பரிவாரங்களுடன் அம்மன் பூஞ்சோலை சென்றது. தொடர்ந்து நேற்று மற்றும் இன்று இரவு கலை நிகழ்ச்சிகள் நடைபெறும். அதற்கான ஏற்பாடுகளை மணக்காட்டூர் ஊர் பொதுமக்கள், விழாக்குழுவினர் மற்றும் கோயில் பூசாரிகள் செய்திருந்தனர்.

பட விளக்கம்: நத்தம் அருகே மணக்காட்டூரில் உள்ள முத்தாலம்மன் கோயில் திருவிழாவையொட்ட பந்தய கழுகுமரம் ஏறுதல் நிகழ்ச்சியில் இளைஞர்கள் கலந்து கொண்டு போட்டி போட்டு ஏறினர்.

பட விளக்கம்: சர்வ அலங்காரத்தில் முத்தாலம்மன்

திண்டுக்கல் செய்தியாளர் நத்தம் மதுரை வீரன்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!